“ஸ்ரீ கிருஷ்ணர் முஸ்லிம், 5 வேளை தொழுகை நடத்தியவர்” - மவுலானா அன்சாரி சர்ச்சை பேச்சு தொடர்பாக எப்ஐஆர் பதிவு

“ஸ்ரீ கிருஷ்ணர் முஸ்லிம், 5 வேளை தொழுகை நடத்தியவர்” - மவுலானா அன்சாரி சர்ச்சை பேச்சு தொடர்பாக எப்ஐஆர் பதிவு
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் புனித நகரான மது​ரா​வில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்​ளது. இந்​துக்​களின் புராதனக் கோயி​லான இதை, முகலாயர் மன்​னர் அவுரங்​கசீப் இடித்​த​தாகப் புகார் உள்​ளது.

எனவே, ஈத்கா மசூ​தியை இடித்​து​விட்டு கோயிலை விரிவுபடுத்த வேண்​டும் என்று உ.பி.​யின் பல நீதி​மன்​றங்​களில் வழக்​கு​கள் நடை​பெறுகின்​றன. இந்​தச் சூழலில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு முஸ்​லிம் என்று உ.பி.​யின் பிரபல மவுலானா ஜர்​ஜிஸ் அன்​சாரி சர்ச்​சைக்​குரிய வகை​யில் கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து மவுலானா அன்​சாரி பகவத் கீதை​யின் ஒரு ஸ்லோகத்தை மேற்​கோள் காட்டி கூறுகை​யில், “இந்த ஸ்லோகம் பக்​தர்​கள் தங்​கள் முழு உடலை​யும் பயன்​படுத்தி வழி​பாடு செய்​யு​மாறு அறி​வுறுத்​துகிறது. எனவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மதத்​தால் ஒரு முஸ்​லிம். கிருஷ்ணர் ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை நடத்​தி​ய​வர். இந்​துக்​கள் தங்​கள் மத நூல்​களைக் கூர்ந்து படித்​தால், அவர்​கள் இஸ்​லாத்தை மதிக்​கத் தொடங்​கு​வார்​கள். இஸ்​லாம் ஒரு உலகளா​விய மதம் என்று இந்து மத நூல்​கள் கூறுகின்​றன. பகவான் ராமர் மற்​றும் கிருஷ்ணர் தொடர்​பான நூல்​களி​லும் இதுவே குறிப்​பிடப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளார்.

இவரது கருத்து சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது. மேலும், “பகவத் கீதை​யின் 6-வது அத்​தி​யா​யத்​தின் 10-வது ஸ்லோகத்தை ஜர்​ஜிஸ் அன்​சாரி தவறாகப் புரிந்து கொண்​டுள்​ளார். மனம், உடல் மற்​றும் ஆன்மா ஆகிய​வற்றை முழு​மை​யாகப் பரம்​பொருளிடம் அர்ப்​பணிப்​பதே ஒரு யோகி​யின் கடமை என்​பது​தான் இந்த ஸ்லோகத்​தின் உண்​மை​யான பொருள். தவிர, இந்த ஸ்லோகத்​தில் ‘நமாஸ்’ அல்​லது ‘இஸ்​லாம்’ பற்றி எங்​கும் குறிப்​பிடப்​பட​வில்​லை” என்று சமூக வலை​தளங்​களில் விளக்​கம் அளித்​துள்​ளனர்.

இதற்​கிடை​யில், மவுலானா ஜர்​ஜிஸ் கருத்​துக்கு மது​ரா​வின் பல்​வேறு இந்து அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. அவரை உடனடி​யாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று அந்த அமைப்​பு​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளன. இதுதொடர்​பாக, இந்​துத்​து​வத் தலை​வர் ஷிஷிர் சதுர்​வேதி அளித்த புகாரின் அடிப்​படை​யில், லக்​னோ​வில் உள்ள ஹஸ்​ரத் கஞ்ச் காவல் நிலை​யத்​தில் முதல் தகவல் அறிக்கை (எப்​ஐஆர்) பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

அன்​சா​ரி​யின் பேச்சு குறித்து விசா​ரணை நடத்​திய பிறகு அடுத்​தகட்ட சட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும் என்று காவல் துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். கடந்த 2022-ம் ஆண்டு “ஒரு முஸ்​லிம் பெண் பிரசவ வேதனை​யில் இருந்​தா​லும் கூட, தனது கணவரின் பாலியல் விருப்​பங்​களை நிறைவேற்​றத் தயா​ராக இருக்க வேண்​டும்” என்று அன்​சாரி கூறி கடும் விமர்​சனங்​களுக்​கு உள்​ளா​னார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

“ஸ்ரீ கிருஷ்ணர் முஸ்லிம், 5 வேளை தொழுகை நடத்தியவர்” - மவுலானா அன்சாரி சர்ச்சை பேச்சு தொடர்பாக எப்ஐஆர் பதிவு
ஹைட்ரஜன் ரயிலை தொடங்கினார் மோடி: 75 நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in