மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 59 எம்எல்ஏக்களுடன் ரிதப்ரதா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவரானார்

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி

மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: ​திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் மம்தா பானர்ஜிக்கு எதி​ராக 59 எம்​எல்​ஏ.க்​கள், ஆதர​வுடன் போர்க்​கொடி தூக்​கிய ரிதப்​ரதா பானர்ஜி எதிர்​கட்சி தலை​வ​ராகி​யுள்​ளார்.

மேற்கு வங்​க சட்​டப்​பேரவை தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி 80 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்று தோல்​வியடைந்​தது. இதனால் மூத்த தலை​வர்​கள் பலர் தங்​கள் கட்சி பதவி​களை ராஜினாமா செய்​தனர். வெற்றி பெற்ற திரிண​மூல் எம்​எல்​ஏ.க்​கள் பாஜக.வுக்கு தாவ முயன்​றனர். இவர்​களில் பலர் மீது சிபிஐ மற்றும் அமலாக்​கத்​துறை வழக்​கு​கள் உள்​ளன. இதனால் திரிணமூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து வருபவர்​கள் யாரை​யும் சேர்க்க வேண்​டாம் என பாஜக கூறி​விட்​டது.

தேர்​தல் முடிவுக்​குப் ​பின் கடந்த மாதம் 6ம் தேதி மம்தா கூட்​டிய திரிண​மூல் எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்​தில் 69 பேர் மட்​டுமே பங்கேற்றனர். கடந்த 19ம் தேதி கூட்​டிய கூட்​டத்​தில் இந்த எண்ணிக்கை 64-ஆக குறைந்​தது, கடந்த 31ம் தேதி கூட்​டிய கூட்டத்​தில் 19 எம்எல்ஏக்​கள் மட்​டுமே பங்​கேற்​றனர்.

திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் சோவன்​தேப் சட்​டோ​பாத்​யாய் என்​பவரை எதிர்க்​கட்சி தலை​வ​ராக்க மம்தா பானர்ஜி முடிவு செய்து அதற்​கான கடிதத்தை சட்​டப்​பேர​வை​யில் அளித்​தார். ஆனால் அதில் உள்ள ஆதரவு எம்​.எல்​.ஏக்களின் கையெழுத்து தங்களு​டையது அல்ல போலி​யாக போடப்​பட்​டது என ரிதப்​ரதா பானர்ஜி மற்​றும் சந்​தீபன் சாகா என்ற 2 எம்​.எல்​.ஏக்​கள் புகார் கூறி​னார். இவர்​கள் மம்​தாவுக்கு எதி​ராக மற்ற எம்​எல்​ஏக்​களை திரட்டி தனி அணி உரு​வாக்​கினர். இதையடுத்து அவர்​கள் கட்சியிலிருந்து நீக்​கப்​பட்​டனர். இதனால் திரிண​மூல் எம்.எல்.ஏ.க்களின் பலம் 78-ஆக குறைந்​துள்​ளது.

இந்​நிலை​யில் திரிண​மூல் கட்​சி​யில் மம்​தாவுக்கு எதி​ராக போர்க்கொடி தூக்​கி​யுள்ள 59 எம்​எல்​ஏ.க்​கள் ஒன்​றாக இணைந்து ரிதப்​ரதா பானர்ஜியை எதிர்க்​கட்சி தலை​வ​ராக அறிவிக்க வேண்டும் என சட்​டப்​ பேர​வை​யில் சபா​நாயகர் ரதிந்ரா போஸை சந்​தித்து கோரிக்கை விடுத்​தனர். இதற்கு சபா​நாயகர் அனு​மதி அளித்​ததையடுத்​து, சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்சி தலைவருக்கான அறை சாவி ரிதப்​ரதா பானர்​ஜி​யிடம் ஒப்படைக்கப்​பட்​டது.

இது குறித்து ரிதப்​ரதா பானர்ஜி கூறுகை​யில், "எதிர்க்​கட்​சி​யின் தலைமை ஆலோ​சக​ராக மம்தா பானர்ஜி இருக்க வேண்​டும் என நாங்​கள் வேண்​டு​கோள் விடுப்​போம்" என்​றார்.

பாஜக மீது குற்​றச்​சாட்டு: கொல்கத்தாவில் நேற்று முன்​தினம் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மம்தா பானர்ஜி அளித்த பேட்​டி​யில், "மகா​ராஷ்டி​ரா​வில் ஆளும் கட்​சியை உடைத்த பாஜக, அதேவேலையை மேற்கு வங்​கத்​தில் செய்​கிறது. இது​தான்​ ஜனநாயகமா ?" என்​றார்​.

<div class="paragraphs"><p><em>மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரதா பானர்ஜி</em></p></div>
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in