அந்நியச் செலாவணியை பாதுகாக்க ரூ.1.15 லட்சம் கோடி தங்கம் விற்கப்பட்டதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்

அந்நியச் செலாவணியை பாதுகாக்க ரூ.1.15 லட்சம் கோடி தங்கம் விற்கப்பட்டதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்
Updated on
1 min read

மும்பை: அந்நியச் செலாவணியை பாதுகாக்க ரூ.1.15 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்பனை செய்திருக்கலாம் என வெளியான செய்தியை அது திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கையிருப்பு தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்றதாக சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என்பதை ரிசர்வ் வங்கி வலியுறுத்திக் கூறுகிறது. தங்கத்தின் இருப்பு குறித்த விவரங்கள் ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் வெளியிடப்படுகின்றன. அந்த செய்தி அறிக்கையை என்ற https://www.rbi.org.in/Scripts/BS_ViewBulletin.aspx?Id=24213 இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் இருப்பு 880.52 டன்களாக மாறாமல் நீடிக்கிறது. எனவே இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: உலகின் மூன்​றாவது மிகப்​பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், மத்திய கிழக்​கில் நில​வும் மோதல் போக்கு காரணமாக கடும் பொருளா​தார நெருக்​கடியை இந்தியா சந்​தித்து வருகிறது. எரிபொருள் விலை​யேற்​றம் மற்​றும் உள்​நாட்டு நாணய மதிப்​பின் வீழ்ச்சி ஆகியவை இந்​தி​யா​வின் அந்நியச் செலாவணி இருப்​புக்கு பெரும் சவாலாக மாறி​யுள்​ளன.

இந்நிலையில், அந்நியச் செலாவணி வெளி​யேற்​றத்​தைக் குறைத்து, பொருளா​தா​ரத்தை நிலைநிறுத்​து​வதற்​கான நடவடிக்கைகளை மத்​திய அரசு தீவிரப்​படுத்​தி​யுள்​ளது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் விலை​யேற்​றம் மற்​றும் விலை மதிப்புள்ள உலோகங்​கள் மீதான இறக்​குமதி வரி கணிச​மாக உயர்த்தப்பட்டுள்​ளது.

இதன் தொடர்ச்சியாக, கையிருப்பு தங்கத்தில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி விற்பனை செய்திருக்கலாம் என புளூம்​பெர்க் எகனாமிக்ஸ் அமைப்​பின் மூத்த இந்​தி​யப் பொருளா​தார நிபுணர் அபிஷேக் குப்தா குறிப்பிட்டிருந்தார். “மே 22-ம் தேதி​யுடன் முடிவடைந்த 2 வாரங்​களில், ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்​புள்ள தங்​கத்தை விற்​பனை செய்திருக்​கலாம். இதன் மூலம், ரிசர்வ் வங்கி தனது அந்​நியச் செலா​வணி சொத்து மதிப்​பில் சுமார் 750 கோடி வரை சேர்த்​திருக்​கலாம்” என்று அபிஷேக் குப்தா கூறி இருந்தார். இது குறித்த செய்தி பரவலாக செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், இதனை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அந்நியச் செலாவணியை பாதுகாக்க ரூ.1.15 லட்சம் கோடி தங்கம் விற்கப்பட்டதா? - ரிசர்வ் வங்கி விளக்கம்
மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் பதவி: டிஎம்சியின் இரு குழுக்களுக்கு இடையே வலுக்கும் போட்டி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in