மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி

Updated on
1 min read

புதுடெல்லி: மகளிர் முன்​னேற்​றம் மற்​றும் அவர்​களின் பங்களிப்பின் முக்​கி​யத்​து​வம் குறித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி நேற்று முன்​தினம் ஒரு வீடியோ வெளியிட்டிருந்​தார்.

அதில் அவர், “இந்​திய பெண்​களின் ஆற்​றல் முடக்​கப்​பட்​டுள்​ளது. அது தன்னை வெளிப்​படுத்​திக்​கொள்ள அனு​ம​திக்​கப்​படு​வ​தில்​லை. கனவு காண​வும் அனு​ம​திக்​கப்​படு​வ​தில்​லை. பெண்​கள் தங்​களை வெளிப்​படுத்​திக்​கொள்ள முடி​யாத ஒரு நாடு நிச்​ச​யம் வெற்றி பெற முடி​யாது” என்று தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், ராகுல் காந்​தி​யின் இந்த வீடியோவை டேக் செய்து மத்​திய நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று வெளி​யிட்ட எக்ஸ் பதி​வில், “இது காங்​கிரஸ் கட்​சி​யிட​மிருந்து வரும் ஒரு நேர்​மறை​யான செய்​தி​யாகத் தெரி​கிறது.

பெண்​கள் விஷ​யத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் மனநிலை​யில் ஒரு தெளி​வான மாற்​றம் தெரி​கிறது. இனி, காங்​கிரஸ் கட்சி மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோ​தாவை நிபந்​தனை​யின்றி ஆதரிக்​கும் என்று நம்​பு​கிறேன்” என பதி​விட்​டிருந்​தார்.

இந்​தப் பதிவுக்கு பதில் அளிக்​கும் வகை​யில் ராகுல் காந்தி கூறும்​போது, “மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோதா 2023-ம் ஆண்​டிலேயே காங்​கிரஸ் கட்​சி​யின் ஆதர​வுடன் ஏற்​கெனவே ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டு​விட்​டது என்​பது நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​ச​ராக இருக்​கும் உங்​களுக்கு தெரிந்​திருக்​கும்.

என்​னுடைய கேள்வி என்​னவென்​றால், 3 ஆண்​டு​கள் கடந்​தும் அது ஏன் இன்​னும் அமல்​படுத்​தப்​பட​வில்​லை? இப்​போது ஏன் அதை தேவையற்ற வகை​யில் தொகுதி மறு​வரையறை மசோ​தாவுடன் இணைக்க விரும்​பு​கிறீர்​கள்? 2023-ம் ஆண்டு நிறைவேற்​றப்​பட்ட சட்​டத்தை அப்​படியே அமல்​படுத்​துங்​கள். தொகுதி மறு​வரையறை​யுடன் இணைக்​காமல், மகளிர் இடஒதுக்​கீட்டை உடனடி​யாக அமல்​படுத்த வேண்​டும் என்று மத்​திய அரசைக் கேட்​டுக்​ கொள்​கிறேன்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி</p></div>
‘தி ஹண்ட்ரட்’ தொடரில் இருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in