மத்திய அரசு நிறுவனம் கண்டுபிடித்த புரோட்டீன் நிறைந்த ‘டிசைனர் அரிசி’ - தனியார் மூலம் விரைவில் சந்தையில் அறிமுகம்

மத்திய அரசு நிறுவனம் கண்டுபிடித்த புரோட்டீன் நிறைந்த ‘டிசைனர் அரிசி’ -  தனியார் மூலம் விரைவில் சந்தையில் அறிமுகம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய அரசின் அறி​வியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்​சில் - தேசிய பல்​துறை அறி​வியல், தொழில்​நுட்ப நிறு​வனம் (சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்​டி) கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் செயல்​படு​கிறது.

சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி நிறு​வனம் சார்​பில் அதிக புரோட்​டீன், இரும்புச் சத்​து, போலிக்அமிலம், வைட்​ட​மின் பி12 உள்ளிட்ட ஊட்​டச் சத்​துகள் அடங்​கிய ‘டிசைனர் அரிசி' ரகம் கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. இதில், சாதாரண அரிசி​யை​விட 3 மடங்கு அதிக புரதச் சத்து உள்​ளது. இதன்​மூலம் பொது​மக்​களின் ஊட்​டச்​சத்து குறை​பாட்டை போக்க முடி​யும். மேலும் டிசைனர் அரிசி​யில் கிளைசெமிக் இன்​டெக்ஸ் (ஜிஐ) அளவு மிக​ குறை​வாக உள்​ளது.

அதிக ஜிஐ அளவு உள்ள அரிசி ரகங்​களால் ரத்​தத்​தில் குளுக்​கோஸ் அளவு விரை​வாக உயரும். புதிய அரிசி​யில் ஜிஐ அளவு குறை​வாக இருப்​ப​தால் சர்க்​கரை நோயாளி​களுக்கு வரப்​பிர​சாத​மாக அமை​யும்.

இதுதொடர்​பாக சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “டிசைனர் அரிசி ரகம் தொடர்​பான தொழில்​நுட்​பம், டாடா கன்​சி​யூமர் புராடக்ட்ஸ், திருப்​பூரை சேர்ந்த எஸ்​எஸ் சோல் புட்ஸ் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்படவுள்ளது. இந்த ஒப்​பந்த பரி​மாற்​றம் தொடர்​பான நிகழ்ச்சி டெல்​லி​யில் பிப். 18-ல் நடை​பெறுகிறது” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மத்திய அரசு நிறுவனம் கண்டுபிடித்த புரோட்டீன் நிறைந்த ‘டிசைனர் அரிசி’ -  தனியார் மூலம் விரைவில் சந்தையில் அறிமுகம்
சட்டப்பேரவையில் ரூ.3.44 லட்சம் கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in