சட்டப்பேரவையில் ரூ.3.44 லட்சம் கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

வேளாண் துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழக அரசின் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழக அரசின் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

Updated on
2 min read

சென்னை: தமிழக அரசின் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் வேளாண் துறைக்கு ரூ.47,248.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் நேற்று தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அதன்படி, சட்டப்பேரவையில் நேற்று காலை 9.30 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து, இடைக்கால வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய தாவது: தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மகளிர், மழலையர், முதியோர், தொல் பழங்குடியினர் மாற்றுத் திறனாளிகள் என கடைக்கோடி தமிழரும் பங்குபெறும் சூழல் உருவாகியிருப்பது தனிச்சிறப்பாகும்.

நாட்டிலேயே முன்னோடியான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.31 கோடி மகளிருக்கு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு ரூ.3,000 மற்றும் கோடை கால சிறப்பு தொகுப்பு ரூ.2,000 என ரூ.5,000 செலுத்தப்பட்ட போது தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது. சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் மக்களை பாதுகாக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

எனினும், மாற்றான்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு வழங்க மறுக்கும் நிதி, அனுமதி மறுக்கப்படும் நலத்திட்டங்கள் என பல தடைகளைத் தாண்டியும், தமிழகம் சாதனை புரிந்து வருகிறது. குறிப்பாக, ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக திகழ்வது மட்டுமின்றி, மின்னணுப் பொருட்கள், மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.

உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் முதலிடம் வகிப்பதுடன், தேசிய அளவில் உள்ள முதல் 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17 நிறுவனங்களுடன் நாட்டில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. வலுவான பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகத்தின் பெயரளவு மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2025-26-ல் 14.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என்றும், உண்மையான வளர்ச்சி 9 சதவீதமாகவும், சராசரி பணவீக்கம் 5.5 சதவீதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2027-28, 28-29-ம் ஆண்டுகளில் இது 14 சதவீதமாக இருக்கும்.

மத்திய அரசின் நிதிப்பகிர்வு உட்பட மாநில அரசின் மொத்த வருவாய் வரவு 2026-27-ம்ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.3,44,575.31 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதில், வரி வருவாய் ரூ.2,29,579.12 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களால் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல், ஜிஎஸ்டி சீரமைப்பால் ஏற்பட்டுள்ள பாதகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. வரியல்லாத வருவாய், இடைக்கால பட்ஜெட்டில் ரூ.27,703.87 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளில் வருவாய் செலவினங்கள் ரூ.3,93,271.63 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பொறுப்பேற்ற ஊதிய செலவினங்களுக்காக ரூ.94,377.56 கோடி, சம்பளம் இல்லாத செயல்பாடுகள், பராமரிப்புக்கான செலவினம் ரூ.18,735.42 கோடியாகவும், ஒய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால பயன்களுக்காக ரூ.45,323.17 கோடி, மானியங்கள், நிதி மாற்றங்களுக்காக ரூ.1,56,108,41 கோடி, கடனுக்கான வட்டிக்கு ரூ.78,677.29 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட் மதிப்பில் வருவாய் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடியாக இருக்கும், நிதி பற்றாக்குறையானது உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதல், திரும்பச் செலுத்துதல் ஆகியவை மதிப்பிடப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில் மாநில அரசு ரூ.1,79,809.65 அளவுக்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது.

அதே நேரம், ரூ.60,413.42 கோடி மதிப்பிலான பொதுக்கடனை திரும்ப செலுத்தும். இதனால், வரும் மார்ச் 31-ம் தேதி நிலுவையில் உள்ள கடன் ரூ.10,71,770.34 கோடியாக இருக்கும். வள ஆதாரங்களை பெருக்குவதற்கான நடவடிக்கைகள், வரிவசூல் திறனை மேம்படுத்துதல் போன்றவற்றால், வருவாய் வரவுகள் திடமான வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஒருங்கிணைப்பு மூலம் தமிழக அரசு தொடர்ந்து நலத்திட்டங்களுக்கான செலவுகள், வளர்ச்சிக்கான முதலீடுகளை தமிழகம் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பொது பட்ஜெட்டை தொடர்ந்து, வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிலையில், துறைக்கு ரூ.47,248.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகள் இல்லாதது ஏன்? - தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால், புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற கருத்து நிலவியது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘பொதுவாக இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும்.

மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும். இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. எனவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தமிழக அரசின் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். </p></div>
“தாரிக் ரஹ்மான் குடும்பத்துடன் இந்தியா வர வேண்டும்” - பிரதமர் மோடி அழைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in