ராமர் கோயில் நன்கொடை திருட்டு வெட்கக்கேடான சம்பவம்: பிரியங்கா காந்தி விமர்சனம்

ராமர் கோயில் நன்கொடை திருட்டு வெட்கக்கேடான சம்பவம்: பிரியங்கா காந்தி விமர்சனம்
Updated on
1 min read

வயநாடு: ராமர் கோயிலுக்​காகத் திரட்​டப்பட்ட நன்​கொடை திருடப்​பட்​ட​தாக கூறப்​படு​வது மிக​வும் துயர​மானது, வெட்கக்கேடானது என்று காங்​கிரஸ் எம்​.பி.பிரி​யங்கா காந்தி கூறி​னார்.

கேரள மாநிலம் வயநாடு எம்​.பி. பிரி​யங்கா கடந்த வியாழக்​கிழமை முதல் தொகு​தி​யில் பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகள் மற்​றும் கூட்​டங்​களில் பங்​கேற்று வரு​கிறார். அவர் நேற்று வயநாடு மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நடை​பெற்ற ஒரு கூட்​டத்​தில் பங்​கேற்ற பிறகு செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது:

அயோத்தி ராமர் கோயிலுக்கு நாடு முழு​வ​தி​லும் இருந்து நம்​பிக்​கை​யும் பற்​றும் கொண்​ட​வர்​கள் நன்​கொடை வழங்​கி​யுள்​ளனர். ஆனால் அவை தற்​போது திருடப்​பட்​ட​தாக தெரி​கிறது. இது மிக​வும் துயர​மானது மற்​றும் வெட்​கக்​கே​டானது என்று நான் கருதுகிறேன்.

என்ன நடந்​தது, எப்​படி நடந்​தது, அது ஏன் நடந்​தது என்​பது குறித்து அரசு விசா​ரிக்க வேண்​டும். மேலும் அந்​தப் பணத்தை சேகரிப்​ப​தற்​கும் பாது​காப்​ப​தற்​கும் பொறுப்​பானவர்​களும் இந்த முறை​கேட்​டுக்​குப் பொறுப்​பேற்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

ராமர் கோயில் நன்கொடை திருட்டு வெட்கக்கேடான சம்பவம்: பிரியங்கா காந்தி விமர்சனம்
உஸ்மான் டெம்பலே ஹாட்ரிக் கோல்: நார்வே அணியை பந்தாடியது பிரான்ஸ் | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in