

கொல்கத்தா: கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்தியக் கடற்படைக்காக 3 போர்க்கப்பல்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மத்திய அரசின், ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியக் கடற்படைக்காக ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய போர்க்கப்பல்களை கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் உருவாக்கியது.
இவற்றில் ஐஎன்எஸ் துனகிரி போர்க் கப்பல் எதிரி நாடுகளின் ரேடார்களில் சிக்காது. இவற்றில் பிரம்மோஸ் உட்பட பலவகை ஏவுகணைகளை ஏவ முடியும்.
கடலின் ஆழத்தை அளவிடும் ஐஎன்எஸ் அக்ராய் ஆழ மற்ற கடற்பகுதியில் பயணிக்கும் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பல். ஐஎன்எஸ் சன்ஷோதக் கடலின் ஆழத்தை அளவிடும் பணியை மேற்கொள்ளும் போர்க்கப்பல்.
இந்த கப்பல்களை மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் மேற்குவங்க ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் சுவேந்து அதிகாரி, கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.