இந்தியா முன்னேறுவதை உலகின் எந்த வல்லரசும் விரும்பவில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வேதனை

இந்தியா முன்னேறுவதை உலகின் எந்த வல்லரசும் விரும்பவில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வேதனை
Updated on: 
1 min read

சத்​ரபதி சம்​பாஜிநகர்: “உல​கின் எந்த வல்​லரசும் இந்தியா முன்னேறு​வதை விரும்​புவ​தில்​லை. ஆனால், இந்​தி​யாவை வெறுக்கும் நாடு​களுக்​குக் கூட உதவ இந்​தியா தயா​ராக உள்​ளது” என, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரி​வித்​தார்.

மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜிநகரில் 5-வது ‘பத்​மா’ திருவிழா​வின் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. ஞானயக்ஞா அறக்​கட்​டளை சார்​பில் 3 நாட்​கள் நடை​பெறும் இந்​தத் திருவிழாவில், பல்​வேறு துறை​களைச் சேர்ந்த பத்ம விருது பெற்றவர்​கள் பங்​கேற்று பொது​மக்​களு​டன் கலந்துரையாடுகின்றனர். இந்​நிகழ்ச்​சி​யில், சிறப்பு விருந்தினராக பங்​கேற்ற ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பேசி​ய​தாவது: உலகம் தற்​போது விசித்​திர​மான சூழ்​நிலை​யில் உள்​ளது. உலகின் எந்த வல்​லரசும் இந்​தியா முன்​னேறு​வதை விரும்​புவ​தில்​லை. அனை​வரை​யும் தங்​களது கட்​டுப்​பாட்​டுக்​குள் வைத்​திருக்​கவே அவை முயற்​சிக்​கின்​றன.

இந்​தியா வளர்ச்​சி​யடைந்​தால், அனை​வருக்​கும் உதவ வேண்​டும் என்ற அதன் கொள்​கை​யால், இந்த வல்​லரசு நாடு​களின் ஆதிக்​கம் முடிவுக்கு வந்​து​விடும். இந்​தி​யாவை வெறுக்​கும் நாடு​களுக்​குக்​கூட தேவைப்​படும் நேரத்​தில் இந்​தியா உதவி வரு​கிறது. மாலத்தீவு நெருக்​கடி​யில் இருந்​த​போது இந்​தியா குடிநீர் வழங்கியது. பொருளா​தார நெருக்​கடி​யில் சிக்​கிய இலங்​கைக்கு நிதி​யுதவி அளித்​தது.

சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களை நேபாளம் எதிர்​கொள்​ளும்​போது இந்தியா உதவு​கிறது. வங்​கதேசத்​துக்​கும் உதவி வரு​கிறது. பாகிஸ்​தானில் வெள்​ளம் மற்​றும் நிலநடுக்​கம் ஏற்​பட்​ட​போது​கூட இந்​தியா உதவி செய்​துள்​ளது. பலவீன​மானவர்​களைப் பாது​காப்​பதி​லும், அமை​தியை நிலை​நாட்​டு​வ​தி​லும்​தான் அதி​காரத்​தின் உண்​மை​யான பலம் உள்​ளது என்று இந்​தியா நம்​பு​கிறது. இது தான் இந்​தி​யா​வின் தனித்​து​வம். இன்​றைய இளைஞர்​கள் அடிமைத்​தனத்​தின் தாக்​கங்​களி​லிருந்து விடு​பட்​ட​வர்​களாக உள்ளனர். ஒரு​வர் உண்​மை​யாகப் பேசி​னால், அவருக்​குப் பின்னால் அணிவகுக்க இளைஞர்​கள் தயா​ராக உள்​ளனர். அவர்கள் பொய்​களை வெறுக்​கிறார்​கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியா முன்னேறுவதை உலகின் எந்த வல்லரசும் விரும்பவில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வேதனை
மெரினா லூப் சாலையில் ஆக்கிரமிப்பு: மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் டிச.1-ல் ஆஜராக உத்தரவு

X