சிஎம்ஆர்எல் பண மோசடி வழக்கில் பினராயி மகளுக்கு மீண்டும் அமலாக்கத் துறை சம்மன்

பினராயி விஜயனின் மகள் வீணா

பினராயி விஜயனின் மகள் வீணா

Updated on
1 min read

கொச்சி: சிஎம்ஆர்எல் பண மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு, அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமி டெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனம், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் நிறுவனத்துக்கு எந்தவொரு சேவையையும் பெறாமல் ரூ.2.78 கோடி செலுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ்எப்ஐஓ), ஏப்ரல் 2025ல் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக முதல் முறையாக வீணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், உடல் நிலை சரியில்லை என்று கூறி அவகாசம் கேட்டார். அதன் பின்னர் கடந்த 17ம் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வீணாவிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 19ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வங்கி லாக்கர்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வாக்கு மூலம் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், வரும் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p><em>பினராயி விஜயனின் மகள் வீணா</em></p></div>
​திருவள்ளூர் - பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து 2 பெண் தொழிலாளர்கள் பலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in