உலகின் ஆய்வகமாக இந்தியா மாற வேண்டும்: மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல் கருத்து

மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல்

மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல்

Updated on
1 min read

அகமதாபாத்: அகம​தா​பாத் இந்​திய மேலாண்மை நிறு​வனத்​தில் ‘ஹெல்த்​கேர் சம்​மிட் 2026’ நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்​திய சுகா​தாரத்​துறை இணை​யமைச்​சர் அனுப்​ரியா படேல் பேசிய​தாவது:

பி​ராந்​திய ஏற்​றத்தாழ்​வு​களைச் சரிசெய்​ய​வும், மருத்​துவ நிபுணர்​கள் பற்​றாக்​குறையைச் சமாளிக்​க​வும் செயற்கை நுண்​ணறிவு ஒரு ‘உந்​துசக்​தி​யாக’ செயல்​படும். பிற நாடு​களில் கண்​டு​பிடிக்​கப்​பட்ட மருந்​துகளை இந்​திய மருந்து தொழில் தொடர்ந்து உற்​பத்தி செய்​வதோடு நிறுத்​திக்​கொள்​ளக் கூடாது. மரபணு ரீதி​யாக பன்​முகத்​தன்மை கொண்ட இந்​தி​யா​வின் மக்​கள்​தொகைக்கு ‘அனை​வருக்​கும் ஒரே சிகிச்​சை’ என்ற அணுகு​முறை பொருந்​தாது.

இதன் காரண​மாக ஒவ்​வொரு நோயாளிக்​கும் தனித்​தன்மை வாய்ந்த சிகிச்​சையை வழங்க செயற்கை நுண்​ணறிவு அவசி​யம். செயற்கை நுண்​ணறிவை பயன்​படுத்தி மருந்து கண்​டு​பிடிப்​பில் இந்​தி​யா, ‘உல​கின் மருந்​தகம்’ என்ற அடை​யாளத்​தைத் தாண்​டி, ‘உல​கின் ஆய்​வக​மாக’ மாற வேண்​டும்.

புதிய மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​பட்​டு, முதுகலை மற்​றும் இளங்​கலை பாடப்​பிரிவு இடங்​கள் அதி​கரிக்​கப்​பட்ட போதி​லும், நிபுணர்​கள் மற்​றும் மேம்​பட்ட நோய் கண்​டறி​யும் வசதி​கள் பற்​றாக்​குறை, தொற்று மற்​றும் தொற்றா நோய்​களின் இரட்​டைச் சுமை ஆகியவை நில​வு​கின்​றன.

ரூ.5,000 கோடி முதலீட்​டில் நடை​முறைப்​படுத்​தப்​படும் ‘பார்​மா-மெட்​டெக் துறை​யில் ஆராய்ச்சி, புத்​தாக்​கத்தை மேம்​படுத்​தும் திட்​டம்’ மூலம், கல்வி நிறு​வனங்​களை தொழில் துறை​யுடன் இணைத்​து, செலவு அடிப்​படையி​லான உற்​பத்​தியிலிருந்து புத்​தாக்க அடிப்​படையி​லான வளர்ச்​சிக்கு நாடு நகர்​கிறது.

மது நேத்ரா ஏஐ, இ-சஞ்​சீவனி தேசிய தொலைமருத்​துவ வலை​யமைப்பு உள்​ளிட்ட முயற்​சிகள் குறிப்​பிடத்​தக்க தாக்​கத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றன. டெல்லி எய்ம்​ஸ், ரிஷிகேஷ் எய்ம்​ஸ், சண்​டிகர் பிஜிஐஎம்​இஆர் ஆகிய 3 மருத்​து​வ​மனை​கள் சுகா​தா​ரத் துறை​யில் ஏஐ-க்​கான 'சிறப்பு மையங்​களாக' அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

<div class="paragraphs"><p>மத்திய இணையமைச்சர் அனுப்ரியா படேல்</p></div>
50% வரிவிதிப்பு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தியது கனடா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in