50% வரிவிதிப்பு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தியது கனடா

இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வர்த்தக பதற்றம் அதிகரிப்பு
கனடா பிரதமர் மார்க் கார்னி

கனடா பிரதமர் மார்க் கார்னி

Updated on
1 min read

ஒட்டாவா: கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு விதிக்​கப்​பட்ட காலக்​கெடு​வுக்கு முன்​பாக, ஓர் உடன்​பாட்டை எட்​டத் தவறியதைத் தொடர்ந்​து, அமெரிக்கா​வுட​னான வர்த்​தகப் பேச்​சு​வார்த்​தையை, கனடா பிரதமர் மார்க் கார்னி நிறுத்தி வைத்​துள்​ளார்.

கனடா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் சுமார் 28 பில்​லியன் டாலர் மதிப்​பிலான பொருட்​களுக்கு இன்று நள்​ளிரவு முதல் 50% வரி விதிக்க அமெரிக்கா முடிவு செய்​துள்​ளது. இதுதொடர்​பாக, இரு​நாடு​களுக்கு இடையே நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​படாததால், பேச்​சு​வார்த்​தையை கனடா நிறுத்தி வைத்​துள்​ளது.

இதுகுறித்​து, கனடா பிரதமர் மார்க் கார்னி கூறுகை​யில், “கன​டா​வில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் சுமார் 28 பில்​லியன் டாலர் மதிப்​பிலான பொருட்​களுக்கு இன்று நள்​ளிரவு முதல் 50% வரி விதிக்க அமெரிக்கா தயா​ராகி வரு​கிறது. கனடா தொழிலா​ளர்​கள் மற்​றும் வர்த்தக நிறு​வனங்​களைப் பாது​காக்க, அமெரிக்​கப் பொருட்​களுக்கு அதே அளவில் பதிலடி வரி விதிக்​கப்​படும்.

புதிய வரி​களைத் தவிர்த்​து, வர்த்தக உடன்​பாட்டை எட்​டும் நோக்​கில் இரு நாடு​களும் வாஷிங்​டனில் கடந்த மூன்று நாட்​களாக பேச்​சு​வார்த்தை நடத்தி வந்​தன. இதில் முக்​கிய​மான முன்​னேற்​றம் ஏற்​பட்​டிருந்​தா​லும், கனடா​வின் இலக்​கு​களைப் பூர்த்தி செய்​யும் வகை​யில் இறுதி உடன்​பாடு ஏற்​பட​வில்​லை. இதன் விளை​வாக, அமெரிக்கா​வுட​னான வர்த்​தகப் பேச்​சு​வார்த்​தையை நிறுத்தி வைக்க முடிவு செய்​துள்​ளேன். பேச்​சு​வார்த்​தைக் குழு​வினர் ஒட்​டா​வாவுக்​குத் திரும்​பு​மாறு உத்​தர​விட்​டுள்​ளேன்” என்றார்.

ஆனால், பேச்​சு​வார்த்தை முறிந்​ததற்கு வேறு​பட்ட விளக்​கத்தை அமெரிக்க வர்த்​தகப் பிர​தி​நிதி ஜேமிசன் கிரீர் அளித்​தார். அவர் கூறுகை​யில், “உடன்​பாடு ஏற்​படு​வதற்​கான முன்​னேற்​றம் இருந்​த​போ​தி​லும், பேச்​சு​வார்த்தையிலிருந்து கனடா வில​கி​விட்​டது. அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யும் முக்​கிய நாடு​களில் கனடாவுக்கு மிகச் சாதக​மான வர்த்​தகச் சலுகைகளை வழங்க வாஷிங்​டன் முன்​வந்​தது. ஆனால், கனடா தரப்​பில் புதி​தாக முன்​வைக்​கப்​பட்ட கோரிக்​கைகள் மற்​றும் ஏற்​க​னவே அளித்​திருந்த உறு​தி​மொழிகளில் இருந்து பின்​வாங்​கிய நடவடிக்​கைகள், பேச்​சு​வார்த்​தை​யில் ஏற்​பட்​டிருந்த சமநிலையை சீர்​குலைத்​தன.

கனடா தரப்​பில் அமெரிக்கா ஏற்க முடி​யாத அளவுக்கு கூடு​தல் சலுகைகள் கோரப்​பட்​டன. குறிப்​பாக, வாக​னங்​கள், எஃகு, அலுமினி​யம் மற்​றும் மரப்​பொருட்​கள் துறை​களில் கனடா கூடு​தல் சலுகைகளை எதிர்​பார்த்​தது. புதிய அமெரிக்க வரி​களுக்கு கனடா பதிலடி கொடுத்​தால், மீண்​டும் வர்த்​தகச் சமநிலையை ஏற்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள அதிபர் டொனால்டு ட்ரம்​புக்கு பரிந்​துரைகள் வழங்​கப்​படும்” என எச்​சரித்​தார்.

இதற்​கிடையே, குறிப்​பிட்ட கனடா பொருட்​களுக்​கான புதிய வரி​கள் நேற்று அதி​காலை 12.01 மணி முதல் அமலுக்கு வந்​துள்​ளது. பேச்​சு​வார்த்தை முறிந்​துள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும்​ இடையே மீண்​டும்​ வர்த்​தகப்​ பதற்​றம்​ அதிகரித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கனடா பிரதமர் மார்க் கார்னி</p></div>
அமெரிக்காவுடனான போரில் ஈரான் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டது: அதிபர் மசூத் பெசெஷ்கியான் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in