வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை ஈர்க்க ரூ.14 கோடி வரை உதவித் தொகை

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை ஈர்க்க ரூ.14 கோடி வரை உதவித் தொகை
Updated on
1 min read

புதுடெல்லி: வெளி​நாடு​களில் பணி​யாற்​றும் இந்திய விஞ்ஞானிகளை மீண்​டும் தாய்​நாட்​டுக்கு திரும்ப அழைக்க ரூ.14 கோடி வரையி​லான ஆராய்ச்சி உதவித் தொகை திட்​டத்தை மத்திய அரசு அமல்​படுத்தி உள்​ளது.

அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய நாடு​களில் மருத்​து​வம், தொழில்நுட்​பம் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் இந்​திய வம்சாவளி​யினர் ஆதிக்​கம் செலுத்தி வரு​கின்​றனர். அவர்​களின் அறி​வால் அந்​நிய நாடு​கள் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்த சூழலில் வெளி​நாடு​களில் பணி​யாற்​றும் இந்திய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்​களை மீண்​டும் தாய்​நாட்​டுக்கு திரும்ப அழைக்க ஏது​வாக ‘‘பிரதமரின் ஆராய்ச்சி இருக்கை திட்​டம் 2026”-ஐ (பிஎம்​ஆர்​சி) மத்​திய அரசு அண்​மை​யில் அறி​வித்​தது.

இந்த திட்​டத்​தின் கீழ் செயற்கை நுண்​ணறி​வு, செமி கண்​டக்​டர், எரிசக்​தி, சைபர் பாது​காப்​பு, மருத்​து​வம், உயிரி தொழில்​நுட்​பம், அரிய​வகை கனிமங்​கள், விண்​வெளி-​பாது​காப்​பு, தகவல் தொடர்பு, உற்​பத்​தி, வேளாண்​மை, மீன் வளம், அணு சக்தி ஆகிய 13 துறை​கள் சார்ந்த ஆராய்ச்சி திட்​டங்​களில் பங்​கேற்க வெளி​நாடு​வாழ் இந்​திய விஞ்​ஞானிகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்டு உள்​ளது. பிஎம்​ஆர்சி திட்​டத்​தில் இளம் ஆராய்ச்​சி​யாள​ருக்கு ரூ.4 கோடி வரை உதவித் தொகை வழங்​கப்​படும்.

மூத்த ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு ரூ.6.5 கோடி முதல் ரூ.14 கோடி வரை உதவித் தொகை அளிக்​கப்​படும். டெல்​லி, மும்​பை, சென்னை, கான்​பூர், ஹைத​ரா​பாத், தன்​பாத்​தில் உள்ள ஐஐடி கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் பெங்​களூரு​வில் உள்ள ஐஐஎஸ்சி கல்வி நிறு​வனத்​தில் வெளி​நாடு​வாழ் இந்​திய விஞ்​ஞானிகள் தங்களது ஆராய்ச்​சிகளை மேற்​கொள்​ளலாம். பிஎம்​ஆர்சி திட்டத்தில் இணைய https://pmrc.education.gov.in/ இணை​யம் வாயிலாக வரும் ஜூலை 15-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம் என்று மத்​திய கல்​வி அமைச்​சகம்​ தெரி​வித்​துள்​ளது.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகளை ஈர்க்க ரூ.14 கோடி வரை உதவித் தொகை
பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in