“அதிகாரம் மறுக்கப்பட்டதன் விரக்தி” - பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் மீது மத்திய அமைச்சர் சாடல்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

Updated on
1 min read

புதுடெல்லி: அதிகாரம் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தி காரணமாக பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில் வெளிநாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் மோடியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி. இந்நிலையில், அவருக்கு பதிலடி தரும் வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது:

“ராகுல், விரக்தி அடைந்துள்ளார். இது அதிகாரம் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விரக்தி. அவர் பிரதமர் மோடியை மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் அவமதித்துள்ளார். இது விரக்தியின் வெளிப்பாடு. முந்தைய ஆட்சியாளர்களால் தேசத்தை வளர்ச்சி பெற செய்ய முடியவில்லை. ஆனால், பிரதமர் மோடி அப்படி இல்லாமல் தேசத்தை வளர்ச்சி பாதை நோக்கி அழைத்து செல்கிறார். அவர் மீதுதான் எதிர்க்கட்சியினர் வசை பொழிகிறார்கள்.

பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் ஐந்து பில்லியன் டாலர் முதலீட்டை தேசத்துக்கு கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். இது தேசத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்குமா? வலுவிழக்க செய்யுமா? நெதர்லாந்தில் உள்ள டெக் நிறுவனங்களுடன் இணைந்து டாடா நிறுவனம் செமிகண்டக்டர்களை இங்கு உற்பத்தி செய்தால் அதன் பலன் யாருக்கு கிடைக்கும்?” என அவர் கேட்டுள்ளார்.

ராகுல் விமர்சனம்: இத்தாலி சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்லேட் பரிசளித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ள நிலையில், மோடியின் செயலுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்தியர்கள் தலைக்கு மேலேயே ஒரு பொருளாதார சூறாவளி சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ இத்தாலியில் மிட்டாய் விநியோகித்துக் கொண்டிருக்கிறார்.

இங்கே விவசாயிகளும், இளைஞர்களும், பெண்களும், தொழிலாளர்களும், சிறு வணிகர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். அங்கே பிரதமர் மோடி சிரித்துக் கொண்டு ரீல்ஸ் எடுக்கிறார். பாஜகவினர் அதற்கு கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். இது தலைமைப் பண்பு அல்ல. மாறாக அதை கேலிக்கூத்தாக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்</p></div>
படித்ததும் தானாகவே மறையும் மெசேஜ்கள் - வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in