படித்ததும் தானாகவே மறையும் மெசேஜ்கள் - வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்?

படித்ததும் தானாகவே மறையும் மெசேஜ்கள் - வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்?
Updated on
1 min read

சென்னை: வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற அம்சத்தை டெஸ்ட் (சோதனை) செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் எப்படி செயல்படும் என்பது குறித்து பார்ப்போம்.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். இத்தகைய சூழலில் பயனர்கள் தாங்கள் அனுப்பும்/பெறும் மெசேஜ்கள் பார்த்தவுடன் தானாகவே மறையும் ‘After Reading’ என்ற அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வாட்ஸ்அப் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் WABetaInfo தெரிவித்துள்ளது.

‘After Reading’ அம்சம்:

இப்போதைக்கு ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஆப்பிள் போன்களில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 26.19.10.72-வில் ‘After Reading’ அம்சம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதை குறிப்பிட்ட பீட்டா டெஸ்டர்களின் பயன்பாட்டுக்கு இப்போது வழங்கி உள்ளதாக தகவல்.

வாட்ஸ்அப் செயலியில் ஏற்கெனவே ‘Disappearing Messages’ அம்சம் உள்ளது. இதன் மூலம் 24 மணி நேரம், 7 நாட்கள், 90 நாட்களுக்குள் சாட்கள் தானாகவே டெலிட் ஆகிவிடும். இத்தகைய சூழலில் பயனர்களின் பிரைவசியை மேம்படுத்தும் வகையில் ‘After Reading’ அம்சம் இருக்கும் என தகவல்.

அதன்படி ‘After Reading’ அம்சம் மூலம் பயனர்கள் அனுப்பும் மெசேஜ்கள் தானாகவே 5 நிமிடம், 1 மணி நேரம் அல்லது 12 மணி நேரத்துக்குள் டெலிட் ஆகிவிடும். அந்த மெசேஜை பெறுகின்ற பயனர், அதை பார்த்த பின்னர்தான் டெலிட் ஆகும். பயனர்கள் செட் செய்துள்ள டைமருக்குள் அந்த மெசேஜ்கள் தானாகவே மறைந்துவிடும். இது மெசேஜை அனுப்பியவருக்கு மட்டுமே பொருந்தும். மெசேஜை பெறுகின்ற நபர் அதை படித்ததும், அனுப்பியவர் செட் செய்த டைம்லைனின் படி நீங்கும். அவர் அந்த மெசேஜை பார்க்கவில்லை என்ற சூழலில் மெசேஜ் அனுப்பப்பட்ட 24 மணி நேரத்துக்குள் நீங்கிவிடும் என தெரிகிறது.

படித்ததும் தானாகவே மறையும் மெசேஜ்கள் - வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்?
தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு: விலைவாசி உயர்வுக்கு எச்சரிக்கை மணி? - ஒரு விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in