முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: தனி​யா​ரால் உரு​வாக்​கப்​பட்ட முதல் பிஎஸ்​எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு விண்​ணில் ஏவப்​படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய விண்​வெளி சங்​கம், இந்​திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்​ரோ) மற்​றும் இந்​திய தேசிய விண்​வெளி மேம்​பாடு மற்​றும் அங்​கீ​கார மையம் (இன்​-ஸ்​பேஸ்) இணைந்து ஏற்​பாடு செய்த 5-வது இந்​திய சர்​வ​தேச விண்​வெளி மாநாடு டெல்​லி​யில் கடந்த 23, 24-ம் தேதி​களில் நடை​பெற்​றது. மாநாட்​டின் நிறைவு நாளான நேற்று முன்​தினம் இஸ்ரோ தலை​வர் நாராயணன் கலந்து கொண்டார். அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

முன்​பு, தொழில் துறை​யின் ஆதர​வுடன் பிஎஸ்​எல்வி ராக்​கெட்டை இஸ்ரோ மட்​டுமே உரு​வாக்கி வந்​தது. தற்​போது, எல்​&டி மற்​றும் ஹெச்​ஏஎல் கூட்​டமைப்​புக்கு ஐந்து பிஎஸ்​எல்வி ராக்​கெட்​டு​களை உரு​வாக்க ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது. இதில், முதல் ராக்கெட்டான பிஎஸ்​எல்​வி-என்1 வேக​மாக தயா​ராகி வரு​கிறது.

அடுத்த ஆண்​டின் முதல் காலாண்​டில் அதை ஏவுவதை இலக்காகக் கொண்​டுள்​ளோம். தகவல் தொடர்​பு, வழி​செலுத்​தல் மற்​றும் புவி கண்​காணிப்​புக்​காக நாம் ஏராள​மான விண்​வெளிச் சொத்​துக்​களை உரு​வாக்க வேண்​டும். இதை அரசுத் துறை​யால் மட்​டும் செய்ய முடி​யாது. தற்​போது சுற்​றுப்​பாதை​யில் இஸ்ரோவின் 56 விண்​வெளி சாதனங்​கள் மட்​டுமே உள்​ளன. எனவே தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயற்கைக்கோள் ஏவுதல்​களை அரசு மிகப் பெரிய அளவில் விரைவுபடுத்தி வரு​கிறது.

இதற்​காக இஸ்​ரோ​வும் இன்​-ஸ்​பேஸ் நிறு​வன​மும் தனி​யார் நிறுவனங்​களுக்​குக் கைகொடுத்து உதவு​கின்​றன. அதன் பலனை இன்​னும் 5 ஆண்​டு​களில் நீங்​கள் காண்​பீர்​கள். இன்​று, ஒரே ஒரு ஸ்டார்ட்​அப் நிறு​வனத்​திலிருந்​து, அவற்​றின் எண்​ணிக்கை 440-க்கும் அதி​க​மாக உயர்ந்​துள்​ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
மதுரை ஆட்சியர், அறநிலையத்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்

X