மதுரை ஆட்சியர், அறநிலையத்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்

மதுரை ஆட்சியர், அறநிலையத்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
Updated on: 
1 min read

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்​ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் அதனை செயல்​படுத்​தத் தவறிய மதுரை மாவட்ட ஆட்சி​யர், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர், காவல் ஆணை​யர் ஆகியோர் மீது நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கக் கோரி உச்​சநீதி​மன்​றத்​தில் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

மதுரை திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றப்​படாததை சுட்​டிக்​காட்டி உச்ச நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தாத மதுரை மாவட்ட ஆட்சி​யர், இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர், மதுரை காவல் ஆணை​யர் ஆகியோ​ருக்கு எதிராக நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்க கோரி ராம ரவிக்​குமார், வி.ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர்.

மேலும், நீதிபதி அர​விந்த் குமார் தலை​மையி​லான அமர்வு முன்பு, ராம ரவிக்​குமார் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் குரு கிருஷ்ணகுமாரும், இந்து தர்ம பரிஷத் அமைப்பு சார்​பில் வழக்​கறிஞர் ஜெய் சுகினும் முறை​யிட்​டனர்.

அப்​போது, “உச்​ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை அமல்​படுத்​தாத மாவட்ட ஆட்சி​யர், இந்து சமய அறநிலை​யத்​துறை ஆணை​யர் உள்​ளிட்ட அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்க வேண்​டும். திட்​ட​மிட்டே தமிழக அரசு திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​றவில்லை. உயர்​நீதி​மன்​றத்​திலும் தீபம் ஏற்​று​வோம் என இறுதிவரை தெரி​வித்​து​விட்டு, உத்​தரவை நடைமுறைப்​படுத்​த​வில்லை” என்று குற்​றம்​சாட்​டினர்.

இதற்கு பதிலளித்த நீதிப​தி​கள், “உச்​சநீதி​மன்ற உத்​தரவை கடைப்​பி​டிக்​காதது தொடர்​பாக நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை கோரி மனு தாக்​கல் செய்​திருந்​தால், அதனை பரிசீலிக்​கிறோம்” என்று உறுதி அளித்​தனர்.

இந்​நிலை​யில், திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற மீண்​டும் உத்​தர​விட வலியுறுத்தி புதிதாக இடைக்​கால மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

கார்த்​தி​கேயன் அழகர்​சாமி என்​பவர் தாக்​கல் செய்​துள்ள மனுவில், “கார்த்​திகை திருநாள் முடிந்​து​விட்​டது என்ற காரணத்​தைக் காட்டி தீபத்​தூணில் தீபம் ஏற்​றாமல் இருப்​பதை அனுமதிக்க கூடாது, உச்ச நீதி​மன்ற உத்​தரவை மீறு​வதற்கு தமிழக அரசு தந்​திர​மான வழி​யில் செயல்​பட அனுமதிக்​கக் கூடாது.

எனவே காலம் கடந்​தா​லும் உச்​சநீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றும் வகை​யில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விட வேண்​டும். அந்த மனுவை உடனடி​யாக விசா​ரணைக்கு எடுக்க வேண்​டும்” என்று நீதிபதி அர​விந்த் குமார் தலை​மையி​லான அமர்​வில் மூத்த வழக்​கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முறை​யிட்​டார்.

அதற்கு நீதிப​தி​கள், “மனுவின் சாராம்​சங்​களை பார்த்​து​விட்டு, பின்​னர் விசா​ரணைக்கு எடுப்​பது தொடர்​பாக பரிசீலிக்​கப்​படும்” என தெரி​வித்​தனர்.

மதுரை ஆட்சியர், அறநிலையத்துறை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் அர்லேகர்

X