குலாம் அகமது மிர்
இந்தியா
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனித்து போட்டி
புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின்னர் கட்சியின் மாநில பொறுப்பாளர் குலாம் அகமது மிர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் 294 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
