பார்மசி பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கும்பலின் 200+ இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்

பார்மசி பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கும்பலின் 200+ இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்
Updated on
1 min read

நியூயார்க்: இந்​தி​யாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்​கும் சர்​வ​தேச கிரிமினல் அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட வலைகளங்​களை அமெரிக்கா முடக்கி உள்​ளது.

இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதிகாரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியதாவது: இந்​தி​யாவை தளமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்​பட்ட இணை​யதளங்​களில் மருந்து மற்றும் போதைப் பொருட்​கள் விற்​ப​தாக பல்​வேறு புகார்கள் வந்​தன. இதையடுத்து மருந்​துக் கட்டுப்பாட்டு துறை கள ஆய்​வாளர்​கள், நாடு முழு​வதும் பல்​வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வரு​கின்​றனர்.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த ஆய்வு நடை​பெறுகிறது. ஆன்​லைனில் பார்​மசி என்ற பெயரில் சட்​ட​விரோத​மாக மருந்து மற்​றும் போதைப் பொருட்​கள் விற்​பனை செய்​த​தில் இது​வரை 3 பேர் உயி​ரிழந்​தது தெரிய வந்​துள்​ளது. அத்துடன் 6 பேர் அதிக டோஸ் மருந்​துகள் எடுத்​துக் கொண்​ட​தில் உடல்நிலை மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்ளது.

இதுதொடர்​பாக 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், இந்​தி​யாவை தளமாகக் கொண்டு இது​போல் ஆன்லைனில் போதை பொருட்கள் விற்​கும் சர்​வ​தேச கிரிமினல் கும்​பல் குறித்து இந்திய அரசிடம் தகவல் தெரிவித்​துள்​ளோம். அத்​துடன் சர்​வ​தேச அளவில் இந்த கும்​பல் செயல்​படு​வ​தால் 200-க்​கும் மேற்​பட்ட இணையதளங்​களை முடக்கி உள்​ளோம்.

கிரிமினல் கும்​பலை கண்​டறிந்து விசா​ரணை நடத்த இந்திய அரசை கேட்​டுக் கொண்டுள்​ளோம். அந்த கும்பலை ஒடுக்​க​வும் தகவல்​கள் அனுப்பி உள்​ளோம். இது​போல் சட்​ட​விரோத​மாக பார்​மசி நடத்​தும் விநியோகஸ்தர்களுக்கு எதி​ராக அமெரிக்க அதி​காரி​கள் நடவடிக்கை எடுத்து வரு​கின்​றனர். இவ்​வாறு அவர்கள்​ தெரி​வித்​தனர்.

பார்மசி பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கும்பலின் 200+ இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்
இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாகிஸ்தானில் கடும் அரசியல் அதிர்வலைகள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in