மே. வங்க விவகாரம்: நியாயமாக தேர்தலை சந்திக்க பாஜகவுக்கு துணிவில்லை: பிரமோத் திவாரி சாடல்

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் பிரமோத் திவாரி

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் பிரமோத் திவாரி

Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தலை நியாமான முறையில் எதிர்கொள்ள பாஜகவுக்கு துணிவு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மீதான கைது நடவடிக்கை, ராகுல் காந்தி இந்தூரில் பங்கேற்ற கூட்டம் குறித்த குற்றச்சாட்டு, எஸ்ஐஆர் பனியின் கீழ் டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸ் உள்ளிட்டவை குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது அல்லது அல்லது தன்வசப்படுத்தும் பணியை அவர்கள் (பாஜக) மேற்கொள்கிறார்கள். நியாயமான முறையில் தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு துணிவு இல்லை.

அதனால் தான் 20 ஆண்டுகால பழைய வழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதில் அவர் மீது தவறு எதுவும் இல்லை. அதனால் தான் இத்தனை ஆண்டுகள் பொதுவெளியில் அவர் இயங்கினார்.

ஜனநாயக முறைப்படி தேர்தலை எதிர்கொண்டு, அதில் வெற்றி பெறும் வாய்ப்பு பாஜகவுக்கு இல்லையா? எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்குவது அல்லது சிறைக்கு அனுப்புவது அவர்களது வாடிக்கை.

இந்தூரில் ராகுல் காந்தி பேசிய போது பிரதமர் மோடியின் தாயாரை விமர்சித்ததாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ராகுலின் பேச்சை இரண்டு முறை கேட்டேன். அதில் யாருடைய தாயார் குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை.

எஸ்ஐஆர் மூலம் டெல்லியின் முன்னாள் முதல்வர், வருமான வரித்துறையில் அதிகாரியான அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணி நடைபெறுகிறது. இதன் மூலம் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு வழங்காத அல்லது வாக்கு செலுத்தாத வாக்காளர்களை பாஜக நீக்குகிறது” என்று பிரமோத் திவாரி தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் பிரமோத் திவாரி</p></div>
கருட சேவையை காண திரண்ட பக்தர்களால் ஸ்தம்பித்த திருமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in