பஞ்சாப் சட்​டப்​பேர​வைத் தேர்தலில் மீண்​டும் பாஜக - அகாலி தளம் கூட்டணி

பஞ்சாப் சட்​டப்​பேர​வைத் தேர்தலில் மீண்​டும் பாஜக - அகாலி தளம் கூட்டணி
Updated on: 
1 min read

புதுடெல்லி: பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக முன்னணி​யின் (என்​டிஏ) பழைய கூட்​ட​ணிக் கட்​சி​யாக இருந்​தது சிரோமணி அகாலி தளம். கடந்த 1996 முதல் 2020 வரை பஞ்​சாபில் அகாலி தளம், பாஜக​வுடன் இணைந்து போட்​டி​யிட்​டும் வந்​தது. இக்​கூட்​ட​ணிக்கு 2007 மற்​றும் 2012 தேர்​தலில் தொடர்ந்து வெற்றி கிடைத்து இரு​முறை ஆட்சி அமைந்​தது. 2020-ல் வேளாண் மசோதா​விற்கு எதிர்ப்பு தெரி​வித்து அகாலி தளம் கூட்டணியிலிருந்து வில​கியது.

இந்​நிலை​யில், இரு​கட்​சிகளும் மீண்​டும் பஞ்​சாபில் கூட்​டணி அமைத்து போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளன. இது தொடர்​பாக பாஜக​வும் சிரோமணி அகாலி தளமும் கிட்​டத்​தட்ட ஒரு உடன்​பாட்​டுக்கு வந்​து​விட்​டன. தொகு​திப் பங்​கீடு குறித்த பேச்​சு​வார்த்​தைகள் இறு​திக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ள​தாக​வும், விரை​வில் இது குறித்த அறி​விப்பு வெளி​யாகும் என்​றும் அரசி​யல் வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

சமீபத்​தில் பஞ்​சாப் வந்​திருந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ ஷா, அங்கு என்​டிஏ ஆட்சி அமை​யும் என்று கூறி இருந்​தார். இதன் மூலம், மீண்​டும் பாஜக, அகாலிதளம் கூட்​டணி அமைப்பதற்​கான வாய்ப்பு உறு​திப்​படுத்​தப்​பட்​டது. தனித்​தனியாகப் போட்​டி​யிட்​டுப் பார்த்​த​தில், அது இரு கட்​சிகளுக்​கும் பாதிப்​பையே ஏற்​படுத்​தி​யது என்​பதை உணர்ந்​து​கொண்​ட​தால், மீண்​டும் இணைய முடி​வெடுத்​துள்​ள​தாக தெரி​கிறது.

2024 மக்​கள​வைத் தேர்​தலில், 45 தொகு​தி​களில் அகாலி தளத்தைவிட பாஜக முன்​னிலை​யில் இருந்​தது. இதனால், மாநிலத்தில் உள்ள மொத்​தம் 117 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், 35 முதல் 45 தொகு​தி​களில் பாஜக போட்​டி​யிடக்​கூடும். மீத​முள்ள தொகு​தி​களில் அகாலி தளமும் பிற சிறிய கட்​சிகளும் போட்டியிடும் வாய்ப்​பு​கள் உள்​ளன. கடந்த மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களில் அகாலி தளம் மற்​றும் பாஜக​வின் ஒருங்​கிணைந்த வாக்கு வங்கி சுமார் 40 லட்​ச​மாக உள்​ளது.

பஞ்​சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2022 சட்​டப்​பேர​வைத் தேர்தலில் 65.38 லட்சம் (42%) வாக்​கு​களு​டன் 92 தொகு​தி​களைப் பெற்​றது. காங்​கிரஸுக்கு 22.98 சதவி​கித​மாக 35.76 லட்​சம் வாக்குகள் கிடைத்​தன. இது, 2024 மக்​கள​வைத் தேர்​தலில், ஆம் ஆத்​மிக்கு 26.30, காங்​கிரஸுக்கு 26.02 சதவி​கித​மாகக் குறைந்​தன. இந்​தத் தரவு​களின்​படி, மும்​முனைப் போட்டி ஏற்​பட்​டால் பாஜக-அகாலி தளம் கூட்​ட​ணிக்கு சாதக​மான சூழலை உரு​வாக்​கும் என கருதப்படுகிறது.

பஞ்சாப் சட்​டப்​பேர​வைத் தேர்தலில் மீண்​டும் பாஜக - அகாலி தளம் கூட்டணி
தமிழகத்தில் தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in