ஒடி​சா​வில் அக்​னி-4 ஏவுகணை வெற்​றிகர​மாக சோதனை

ஒடி​சா​வில் அக்​னி-4 ஏவுகணை வெற்​றிகர​மாக சோதனை
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வின் நடுத்தர தூரம் பாயும் அக்னி-4 பாலிஸ்டிக் ஏவுகணை, ஒடிசா மாநிலம், சந்​திப்​பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்​தில் வெற்​றிகர​மாக சோதனை செய்து பார்க்​கப்​பட்​டது.

இதுகுறித்​து, பாது​காப்பு துறை அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள செய்திக் குறிப்​பில், “நடுத்தர தூரம் பாயும் பாலிஸ் டிக் ஏவுகணையான ‘அக்​னி-4’ நேற்று (6-ம் தேதி) ஒடி​சா​வின் சந்திப்பூரில் உள்ள ஒருங்​கிணைந்த சோதனைத் தளத்​தில் வெற்றிகர​மாக ஏவப்​பட்​டது. மேலும், இந்த ஏவுதல் மூலம் ஏவுகணை​யின் அனைத்து செயல்​பாட்டு மற்​றும் தொழில்​நுட்ப அம்​சங்​களும் வெற்​றிகர​மாக உறு​திப்​படுத்​தப்​பட்​டன” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஒடி​சா​வில் அக்​னி-4 ஏவுகணை வெற்​றிகர​மாக சோதனை
பேரவையில் முதல்வர் பதில் சொல்லட்டும்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in