பேரவையில் முதல்வர் பதில் சொல்லட்டும்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தல்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் குறித்து, சட்டப்பேரவைக்கு வெளியே கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி. உடன் திமுக எம்எல்ஏக்கள். | படம்: ம.பிரபு |

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் குறித்து, சட்டப்பேரவைக்கு வெளியே கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி. உடன் திமுக எம்எல்ஏக்கள். | படம்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: ​கா​விரி, மேகே​தாட்​டு, விவ​சா​யிகள் பிரச்​சினை குறித்து விவா​திக்க ஒத்​திவைப்பு தீர்​மானம் கொண்டு வர கடிதம் கொடுத்​திருக்​கிறோம். அப்​போது, தைரி​யம் இருந்​தால் சட்டப்பேரவையில் எழுந்து நின்று முதல்​வர் பதில் சொல்​லட்​டும் என்று உதயநிதி ஸ்டா​லின் தெரிவித்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று வேளாண் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்ட நிலை​யில், பேர​வைக்கு வெளியே எதிர்​கட்சி தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகளின் உரிமை​களுக்​காகக் குரல் கொடுக்​கும் வித​மாக​வும், அரசுக்கு எதிர்ப்​புத் தெரிவிக்​கும் வகை​யிலும் திமுக சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் அனை​வரும் கருப்​புச் சட்டை அணிந்து அவைக்கு வந்​துள்​ளோம்.

இந்த பட்​ஜெட்​டில் புதிய திட்​டங்​கள் எது​வும் இல்​லை. கடந்த திமுக ஆட்​சி​யில் கொண்​டு​வரப்​பட்ட திட்​டங்​களையே பெயர் மாற்​றி, புதிய திட்​டங்​களைப் போல அறி​வித்​துள்​ளனர்.

இது பட்​ஜெட் என்​பதை விட, மரபு​களை மீறி அமைச்​சர்​கள் அனை​வரும் முதல்​வருக்கு ‘ஜால்​ரா’ அடிக்​கும் புகழுரை பட்​ஜெட்​டாகவே உள்​ளது. இதில் உருப்​படி​யாக எது​வும் இல்​லை.

காவிரி மற்​றும் மேகே​தாட்டு விவ​காரம், விவ​சா​யிகளின் பாதிப்​பு​கள் குறித்து விவா​திக்க அவை​யில் ஒத்​திவைப்பு தீர்​மானம் கொண்டு வர சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் கடிதம் கொடுத்​துள்​ளோம்.

இவை அனைத்​தும் குறித்து சட்​டப்​பேர​வை​யில் நாங்​கள் கேள்வி எழுப்​புவோம். தைரி​யம் இருந்​தால் முதல்​வர் எழுந்து நின்று அவை​யில் பதில் சொல்​லட்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஸ்டா​லின் கருத்து

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தனது எக்ஸ் தள பதி​வில், ‘வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்​வரின் உச்​சிகுளிர பாராட்​டு மழை பொழியப் பயன்​பட்​டது​தான் வேளாண் பட்​ஜெட்.

மற்​றுமொரு பெயர்​மாற்ற நிகழ்​வாக மட்​டுமே நடந்து முடிந்​துள்​ளது. திமுக அரசின் திட்​டங்​களின் மேல் ‘வெற்​றி’ என்ற லேபிளை ஒட்​டி​னால் வேலை முடிந்​தது என்று இந்த அரசு நினைக்​கிற​தா? டெல்டா விவ​சா​யிகளுக்கு எது​வுமில்​லாத, வெற்று பட்​ஜெட்​டாக இந்த வேளாண் நிதி​நிலை அறிக்கை அமைந்​திருக்​கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல் குறித்து, சட்டப்பேரவைக்கு வெளியே கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி. உடன் திமுக எம்எல்ஏக்கள். | படம்: ம.பிரபு |</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in