ரூ.200 கோடி மோசடி வழக்கில் அப்ரூவராக ஜாக்குலின் மனு

ரூ.200 கோடி மோசடி வழக்கில் அப்ரூவராக ஜாக்குலின் மனு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய சட்ட அமைச்சக உயர் அதிகாரி போல் கர்நாடகாவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் நடித்து, ரூ.200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பான அமலாக்கத் துறை வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா முன் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை ஜாக்குலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ரூ.200 கோடி மோசடி வழக்கில் அப்ரூவராக ஜாக்குலின் மனு
எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்வது முதல்முறையல்ல: ஐந்து முறை நடத்தப்பட்ட தொகுதி வரையறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in