எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்வது முதல்முறையல்ல: ஐந்து முறை நடத்தப்பட்ட தொகுதி வரையறை

எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்வது முதல்முறையல்ல: ஐந்து முறை நடத்தப்பட்ட தொகுதி வரையறை
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்​களவை தொகுதி எண்​ணிக்​கை​யில் மாற்​றங்​கள் கொண்டு வரப்​படு​வது இது முதல் முறையல்​ல. சுதந்​திரத்​துக்​குப் பிறகு எம்​.பி.க்​களின் எண்​ணிக்கை 5 முறை மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் முதல் பொதுத் தேர்​தல் 1951 அக்​டோபர் 25 முதல் 1952 பிப்​ர​வரி 21 வரை நடை​பெற்​றது. அப்​போது 489 மக்​களவை இடங்​களுக்​கான வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. ஆரம்ப கால ஏற்​பாடு​களின் அடிப்​படை​யில் இந்த தொகு​தி​களின் எண்​ணிக்கை தீர்​மானிக்​கப்​பட்​டது. அடுத்து 1957-ல் நடை​பெற்ற 2-வது பொதுத் தேர்​தலில் எம்​.பி.க்​களின் எண்​ணிக்கை 494 ஆக உயர்ந்​தது. அதன்​பின், 1967-ல் 4-வது பொதுத் தேர்​தலின் போது, தொகு​தி​களின் எண்​ணிக்கை 520 ஆக அதி​கரிக்​கப்​பட்​டது. ஆனால், 1971 தேர்​தலில் 518 என குறைக்​கப்​பட்​டது.

அதன்​பின் 1977-ல் இந்த எண்​ணிக்கை 542 ஆக உயர்ந்​தது. 1980-ல் மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்கை 543 என உயர்த்​தப்​பட்​டது. அதன்​பின் இன்று வரை அந்த எண்​ணிக்கை மாறாமல் நீடித்து வரு​கிறது.

குடும்​பக் கட்​டுப்​பாடுத் திட்​டத்தை ஊக்​குவிக்​க​வும், பல்​வேறு மாநிலங்​களுக்கு இடையி​லான சமநிலையை பேண​வும் 1976-ல் தொகுதி மறு​வரையறை செய்​வது நிறுத்​தப்​பட்​டது. மக்​கள் தொகை பெரு​கி​னாலும் ‘உறை நிலை’ (பிரீஸ்) என்ற பெயரில் மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​காது என அப்​போது முடிவு செய்​யப்​பட்​டது. அதே​நேரத்​தில் இந்த உறை நிலை 2001 வரை அமலில் இருக்​கும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இந்த நடை​முறை பின்​னர் 2026-ம் ஆண்டு வரை நீட்​டிக்​கப்​பட்​டது.

இதனால், கடந்த பல தசாப்​தங்​களாக மக்​கள்​தொகை கணிச​மாகப் பெரு​கி​னாலும், மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்கை மாறாமல் இருக்​கிறது. இதற்​கிடை​யில், 1971 மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புக்​குப் பிறகு, நாடாளு​மன்​றத் தொகு​தி​களின் எல்​லைகள் மீண்​டும் மாற்றி அமைக்​கப்​பட்​டன. ஆனால், மக்​களவை தொகு​தி​களின் எண்​ணிக்​கை​யில் மாற்​றம் செய்​ய​வில்​லை.

தற்​போது, 2026-ம் ஆண்​டுக்​குப் பிறகு மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் விவாதங்​கள் நடை​பெறுகின்​றன. அப்​படி தொகுதி எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டால், இந்த நடவடிக்​கை 6-வது ​முறை​யாக இரு​க்​கும்​.

எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்வது முதல்முறையல்ல: ஐந்து முறை நடத்தப்பட்ட தொகுதி வரையறை
ஆந்திராவில் லேசான நில நடுக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in