Published : 01 Sep 2017 08:14 AM
Last Updated : 01 Sep 2017 08:14 AM

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள முடியும்.

முன்னதாக, ஜூலை 31-ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிவதாக இருந்தது. வருமான வரி தாக்கல் செய்வதற்காக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை என வரி செலுத்துவோர் பலர் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வருமான வரித் துறையினருக்கு பலர் புகார் தெரிவித்துள்ளனர். ஆதார் எண்ணில் இருக்கும் பெயரும் பான் அட்டையுடன் இருக்கும் பெயரும் சிறிய அளவில் மாறுபட்டாலும் அதை ஏற்க மறுப்பதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.

ஆதார் எண்ணை பான் அட்டையுடன் மட்டும் இணைக்காமல், மியூச்சுவல் ஃபண்ட்களிலும் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கும் டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேம்ஸ் (CAMS) உள்ளிட்ட இணையதளங்களில் இதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே ஆதார் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x