Published : 23 Apr 2023 09:54 AM
Last Updated : 23 Apr 2023 09:54 AM
புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (தெற்கு மற்றும் மத்திய ஆசியா) டொனால்டு லு பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த ஆண்டு ஜி20 கூட்டத்துக்கு இந்தியா தலைமை தாங்குகிறது. இதுபோல ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் (ஏபிஇசி) கூட்டத்தை அமெரிக்கா நடத்துகிறது. ஜி7 கூட்டத்தை ஜப்பான் நடத்துகிறது.
குவாட் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை ஏற்றுள்ளன. இது உலக நாடுகளுக்கு இடையில் மிகப்பெரிய நெருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொள்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT