Published : 22 Apr 2023 04:56 AM
Last Updated : 22 Apr 2023 04:56 AM
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மாநாடு மும்பையில் நேற்று நடைபெற்றது. ஆனால், இந்த மாநாட்டில் அக்கட்சியின் முக்கிய தலைவர் அஜித் பவார் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து புனேயில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார், “ முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால் என்சிபி மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை" என்றார்.
இந்த நிலையில், கட்சி கூட்டத்தில் அஜித் பவார் பங்கேற்கவில்லை என்பதால் அவர் கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளார் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை என்று என்சிபி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுடன் அஜித் பவார் நெருக்கமாக உள்ளதாகவும், என்சிபி கட்சியிலிருந்து அவர் விலகவுள்ளதாகவும் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT