Published : 09 Apr 2023 05:02 PM
Last Updated : 09 Apr 2023 05:02 PM

இந்தியாவில் 3,167 புலிகள் உள்ளன: பிரதமர் மோடி பகிர்ந்த புள்ளிவிவரம்

கோப்புப் படம்

பெங்களூரூ: 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சுமார் 3,167 புலிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார். இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் பொன் விழா ஆண்டு கர்நாடகாவில் உள்ள மைசூரில் இன்று நடந்தது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அதில் மோடி பேசியதாவது, “ இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு 1,411 புலிகள் இருந்தன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1706 புலிகள் இருந்தன. 2018ன் கணக்கெடுப்பின்படி 2,967 ஆக அதிகரித்தது. 2018 ஆம் ஆண்டு 2,967 புல்லிகள் இருந்த நிலையில் தற்போது 2002 ஆம் ஆண்டின் கணக்கின் படி 3,167 புலிகள் உள்ளன” என்றார்.

மேலும், அடுத்த 25 ஆண்டுகளில் புலிகளைப் பாதுகாப்பதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கும் ‘Amrit Kaal Ka Tiger Vision' என்ற சிறு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

நமது நாட்டில் உள்ள புலிகளை ‘வங்காளப் புலி’ அல்லது `ராயல் பெங்கால் புலி’ என அழைக்கிறோம். இந்த வங்காள புலியின் எண்ணிக்கை உலகளவில் கிட்டதட்ட 4,500 இருக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x