Published : 24 Sep 2017 07:20 AM
Last Updated : 24 Sep 2017 07:20 AM

தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள்: தேவஸ்தான அதிகாரி ரவிகிருஷ்ணா தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான பாதுகாப்பு தலைமை அதிகாரி ரவிகிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரம்மோற்சவ விழாவுக்கு 2,700 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரும் 27-ம் தேதி கருட சேவைக்கு கூடுதலாக 1,000 போலீஸார் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ஊர்க்காவல் படையினர், சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 1,000 பேர் பங்கேற்கின்றனர். பல்வேறு இடங்களில் 640 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

மலையேறும் பயிற்சி பெற்ற போலீஸார் ஆயுதம் ஏந்தியபடி சேஷாசல மலையை கண்காணிக்கின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்களின் குழந்தைகள் கையில் ஒரு கங்கணம் போன்று கட்டப்படும். அதில் குழந்தையின் பெயர், முகவரி, பெற்றோர் பற்றிய முழு தகவல்கள் இருக்கும். குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை உடனடியாக கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க இது வசதியாக இருக்கும்.

திருமலைக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ‘பிரம்மோற்சவம் பார்க்கிக் டிராக்கர்’ என்ற இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோர் மூலம் செல்போனில் பதிவிறக்கம் செய்யலாம். இது கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனங்களை நிறுத்த எங்கெங்கு இடம் காலியாக உள்ளது என அறியலாம். பக்தர்கள் வாகனங்களை காலியாக உள்ள இடங்களில் நிறுத்தி கொள்ளலாம். இவ்வாறு ரவிகிருஷ்ணா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x