Published : 09 Feb 2023 04:42 AM
Last Updated : 09 Feb 2023 04:42 AM

வீடு கட்டும் திட்டத்தில் பணத்தை பெற்றவுடன் காதலர்களுடன் தலைமறைவு - கணவர்கள் அதிர்ச்சி

லக்னோ: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக (இடபிள்யூஎஸ்) பிரதமரின் வீடு கட்டும் திட்டம் (பிஎம்ஏஒய்) நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.67 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டில் உள்ள குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்குக்கு பணம் வந்து சேரும். அதைக் கொண்டு அவர்கள் தங்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொள்ள முடியும்.

அதன்படி உ.பி.யைச் சேர்ந்த 4 பெண்கள் வீடு கட்ட முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது வங்கிக் கணக்கில் பணம் வந்தவுடன் அந்த 4 பெண்களும் தங்களது காதலர்களுடன் மாயமாகிவிட்டனர்.

இதனிடையே பணத்தைப் பெற்ற 4 பெண்களின் கணவர்களுக்கு, ஏன் வீடு இன்னும் கட்டவில்லை என்று கேட்டு மாவட்ட நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்திடமிருந்து (டியுடிஏ) நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அப்போதுதான் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தங்களது மனைவிகள் விண்ணப்பித்தததும், அதில் முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் வந்ததும் கணவர்களுக்குத் தெரிய வந்தது. இதனால் அந்த கணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து தங்களது மனைவிகள் கள்ளக் காதலர்களுடன் தலைமறைவானதாக அதிகாரிகளிடம் 4 கணவன்மார்களும் தெரிவித்தனர். இதனால் பணத்தை அந்த பெண்களிடமிருந்து எப்படி வசூலிப்பது எப்படி என்று தெரியாமல் அதிகாரிகள் சிக்கலில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x