Published : 15 Jul 2014 02:37 PM
Last Updated : 15 Jul 2014 02:37 PM

சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமான நிலையங்களில் உலகத் தர வசதி: மத்திய அரசு

தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 40 விமான நிலையங்களில் உலகத் தர முனைய கட்டிடம் உள்ளிட்ட உலகத் தர சேவை இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜி.எம். சித்தேஸ்வரா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மேலும் அவர் கூறும்போது, "விமான நிலையங்களின் மேம்பாடும் நவீன மயமாக்குதலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

எந்த வில்லங்கங்களும் இல்லாமல் இடம் கிடைத்தல், விமான போக்குவரத்து தேவை, வணிக சாத்தியங்கள் மற்று ஏனைய சமூக - பொருளாதார பரிசீலனைகளை கருத்தில் கொண்டு இந்த வளர்ச்சி பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பதி மற்றும் சண்டிகரில் புதிய முனையம் அமைத்தல், ஜம்மு விமான நிலையத்தின் முனையத்தை விரிவுபடுத்துதல் குறித்து பரிசீலனை செய்து வருகிறது.

போர்ட் பிளேர், ஹூப்ளி, பெல்காம் மற்றும் அகர்தலா விமான நிலையங்களில் புதிய முனையம் அமைப்பதற்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது" என்றார் சித்தேஸ்வரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x