Published : 17 Dec 2022 03:11 AM
Last Updated : 17 Dec 2022 03:11 AM

"மேட் இன் பாகிஸ்தான்" தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

புதுடெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடந்தது. இதில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கிய இந்தியா 2 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இதில் ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பயங்கரவாத செயல்களுக்காக பாகிஸ்தானை கடுமை விமர்சித்தார். மேலும், “இந்த உலகம் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கிறது. மேலும், தீவிரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டுள்ளது” என்ற கடுமையான விமர்சனங்களை பாகிஸ்தானை நோக்கி வைத்தார்.

இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்ச்சையான விதத்தில் பதிலளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பிலாவல் பூட்டோ கூறும்போதுபோது, “நான் இந்தியாவுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் இருக்கிறார்... அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) பிரதமராகும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இவர்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதமரும். ஆர்எஸ்எஸ் என்றால் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டவர்கள்” என்று கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனிப்பட்ட ரீதியில் விமர்சனத்தை முன்வைத்திருப்பது சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை பிலாவல் பூட்டோவுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. வெளியுறவுத்துறை வெளிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்தை வளர்த்து உலகம் முழுவதும் பரப்பும் நாடு பாகிஸ்தான் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேசுகையில், "பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் கருத்துக்கள் அநாகரீகத்தின் உச்சம். வங்காளிகள் மற்றும் இந்துக்கள் மீது பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் நேரடி விளைவாக, 1971-ல் இந்த நாளை (வங்கதேச போர் நடந்த நாள்) பிலாவல் பூட்டோ மறந்துவிட்டார். சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் பெரிதாக மாறியபோது போல் தெரியவில்லை. தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் மற்றும் நிதியளிப்பதில் பாகிஸ்தானின் மறுக்க முடியாத பங்கு உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. தீவிரவாதிகளை பயன்படுத்தும் பாகிஸ்தானின் இயலாமையே பிலாவல் பூட்டோவின் பேச்சாக வெளிப்படுகிறது.

நியூயார்க், மும்பை, புல்வாமா, பதான்கோட் மற்றும் லண்டன் போன்ற நகரங்கள் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற மற்றும் தூண்டப்பட்ட தீவிரவாதத்தின் வடுக்களை தாங்கி நிற்கின்றன. "மேட் இன் பாகிஸ்தான்" தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும்" என்று பாகிஸ்தானை கடுமையாக சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x