இரு நாட்டு எல்லைப் படையினரும் அனுமதி மறுப்பதால் இந்தியா - வங்கதேச எல்லையில் 9 பேர் தவிப்பு

இரு நாட்டு எல்லைப் படையினரும் அனுமதி மறுப்பதால் இந்தியா - வங்கதேச எல்லையில் 9 பேர் தவிப்பு
Updated on
1 min read

குவாஹாட்டி: எந்த நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தில் குழப்​பம் நீடிப்​ப​தால் இந்​திய, வங்கதேச எல்லைக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் 9 பேர் தவித்து வரு​கின்​றனர்.

அசாமின் தெற்கு சல்​மா​ரா-மன்​கச்​சார் மாவட்ட எல்​லை​யில் வங்கதேசத்​திலிருந்து இந்​தி​யா​வுக்​குள் நுழைய முயன்ற 9 பேரை எல்​லைப் பாது​காப்​புப் படை​யினர் (பிஎஸ்​எப்) தடுத்து நிறுத்தி உள்ளனர். அவர்​களை தங்​கள் நாட்​டுக்கு செல்​லு​மாறு அறிவுறுத்தி உள்​ளனர்.

ஆனால், அவர்​களை அனு​ம​திக்க வங்​கதேச எல்​லைக் காவல் படை (பிஜிபி) மறுப்பு தெரி​வித்து வரு​கிறது. அவர்​கள் வங்​கதேசத்​தைச் சேர்ந்​தவர்​கள் என்​ப​தற்​கான ஆதா​ரம் இல்லை என பிஜிபி கூறுகிறது.

குடி​யுரிமை இன்​னும் உறு​திப்​படுத்​தப்​ப​டாத​தால், அந்த 9 பேரால் இரு நாடு​களுக்​குள்​ளும் நுழைய முடிய​வில்​லை. இவர்​கள் இரு நாடு​களுக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் தவித்து வரு​கின்​றனர். இந்தப் பிரச்​சினைக்​குத் தீர்வு காண்​ப​தற்​காக இந்​திய எல்​லைப் பாது​காப்​புப் படைக்​கும் (பிஎஸ்​எப்) வங்​கதேச எல்​லைக் காவல் படைக்​கும் இடையே ஒரு கொடி அமர்வு கூட்​டம் நடை​பெற்​றது. ஆனால், இந்​தக் கூட்​டத்​தில் எந்த முடி​வும் எட்​டப்​பட​வில்லை என கூறப்​படு​கிறது.

ஞாயிற்​றுக்​கிழமையன்று இந்த 9 பேரும் எல்​லை​யின் இடைப்​பட்ட பகு​தி​யில் தவிப்​பது கண்​டறியப்​பட்​டதை அடுத்​து, மன்​கச்​சார் பகு​தி​யில் உள்ள இந்​தி​ய-வங்​கதேச எல்​லை​யில் பதற்​றம் தொற்​றிக்​கொண்​டது.

சமூக வலை​தளங்​களில் பரவி வரும் ஒரு வீடியோ​வில், அவர்​களில் ஒரு​வர் தாங்​கள் வங்​கதேச குடிமக்​கள் என்​றும், வேலைக்​காக இந்​தி​யா​வுக்கு வந்​த​தாக​வும் ஒப்​புக்​கொள்​வது கேட்​கிறது. எதிர்​காலம் குறித்த நிச்​சயமற்ற தன்​மை​யால் அவர்​கள் அழு​வதைக் காட்​டும் மேலும் பல வீடியோக்​களும் வெளி​யாகி​யுள்​ளன.

இரு நாட்டு எல்லைப் படையினரும் அனுமதி மறுப்பதால் இந்தியா - வங்கதேச எல்லையில் 9 பேர் தவிப்பு
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவுவைப்பு; ரூ.2,500 எப்போது கிடைக்கும்? - பெண்கள் எதிர்பார்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in