மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவுவைப்பு; ரூ.2,500 எப்போது கிடைக்கும்? - பெண்கள் எதிர்பார்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மகளிர் உரிமைத்​தொகை திட்​டத்​தில் 1.31 கோடி பெண்​களுக்கு ஜூன் மாதத் தொகை வங்​கிக் ​கணக்​கில் நேற்று வரவு வைக்​கப்​பட்​டது. அதே​நேரம் தவெக அறி​வித்த ரூ.2,500 எப்​போது வழங்​கப்​படும் என்ற எதிர்​பார்ப்பு பெண்​கள் மத்​தி​யில் எழுந்​துள்​ளது.

தமிழகத்​தில் பெண்​களுக்கு மாதம்​தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்​கும் திட்டத்தின் கீழ் ஒவ்​வொரு மாத​மும் 15-ம் தேதி பயனாளி​களின் வங்​கிக்​கணக்​கில் நேரடி​யாக செலுத்​தப்​படுகிறது. இந்த திட்​டத்​தின்​கீழ் 1.31 கோடி பெண்​கள் பயன் அடைந்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், திமுக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் மகளிர் உரிமைத்​தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்த்தி வழங்​கப்​படும் என்று தேர்​தல் அறிக்​கை​யில் முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​திருந்​தார்.

தவெக ஆட்​சிக்கு வந்​தால் 60 வயதுக்கு உட்​பட்ட பெண்​களுக்கு ரூ.2,500 வழங்​கப்​படும் என தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்​போது தவெக தலை​வர் விஜய் வாக்​குறுதி அளித்​தார். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக வெற்றி பெற்று கடந்த மே மாதம் ஆட்​சி​யமைத்தை ​தொடர்ந்​து, சட்​டப்​பேரவை விவாதத்​தில் முதல்​வர் விஜய் பேசும்​போது, திமுக அரசின் திட்​டங்​கள் தொடரும் என்று அறி​வித்​தார். அதே​போல், தவெக அறி​வித்த மகளிர் உரிமைத் தொகை விரை​வில் வழங்​கப்​படும்.

அதற்கு காலஅவ​காசம் தேவை என அறி​வித்​தார். இதனால் ஏற்​கெனவே வழங்​கப்​பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை நிறுத்​தப்​படுமோ? என்று பெண்​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர். ஆனால், கடந்த மாதம் உரிமைத் தொகை வரவு வைக்​கப்​பட்​டது. அதே​போன்று இந்த மாத​மும் பெண்​களுக்​கான உரிமைத் தொகை வங்​கிக் கணக்​கில் நேற்று வரவு வைக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே, 60 வயதுக்கு உட்​பட்ட பெண்​களுக்கு மாதம்​தோறும் ரூ.2,500 வழங்​கப்​படும் என தவெக தேர்​தல் வாக்​குறுதி எப்​போது நிறைவேற்​றப்​படும்? என எதிர்​பார்ப்பு பெண்​கள் மத்​தி​யில் எழுந்​துள்​ளது. மேலும், ஏற்​கெனவே மகளிர் உரிமைத்​தொகை திட்​டத்​தில் பயன் அடைந்​து​வரும் பெண்​களுக்கு ரூ.1000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்​கப்​படு​மா? அல்​லது புதி​தாக விண்​ணப்​பங்​கள் பெற்று பயனாளி​கள் தேர்வு செய்​யப்​படு​வார்​களா? என்ற கேள்​வி​யும்​ மகளிர்​ மத்​தி​யில்​ நிலவுகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், ஈரான் சபாநாயகர் ஆன்லைனில் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in