Published : 02 Oct 2022 06:07 AM
Last Updated : 02 Oct 2022 06:07 AM

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே - சசிதரூர் இடையே நேரடி போட்டி: கையெழுத்து பிரச்சினையால் திரிபாதி மனு நிராகரிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் கார்கே - சசி தரூருக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட் டுள்ளது. கே.என். திரிபாதி மனு கையெழுத்து பிரச்சினையால் நிராகரிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. அதன்பின் அகில இந்திய காங்கிரஸ்கமிட்டியின் மத்திய தேர்தல்ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் மல்லிகார்ஜூன கார்க்கே போட்டியிட 14 மனுக்களும், சசிதரூருக்கு ஆதரவாக 5 மனுக்களும், திரிபாதி சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் கே.என்.திரிபாதி மனுவில் முன்மொழிந்தவரின் கையொப்பம் சரியாக பொருந்தவில்லை. முன்மொழிந்த மற்றொருவரின் கையெழுத்து மீண்டும், மீண்டும் போடப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மனுவை வாபஸ் பெற இம்மாதம் 8-ம் தேதிகடைசி நாள். யாரும் வாபஸ் பெறவில்லை என்றால், 17-ம் தேதிவாக்கெடுப்பு நடைபெறும். இவ் வாறு மிஸ்த்ரி கூறினார்.

தற்போதைய நிலவரப்படி கட்சித்தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுனகார்கே, சசிதரூர் இடையே நேரடிபோட்டி ஏற்பட்டுள்ளது. கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றால் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.

கார்கே ராஜினாமா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதால் மல்லிகார்ஜுன கார்கே தனது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் சிந்தனை அமர்வு கூட்டத்தில் ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே கார்கே ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ப,சிதம்பரம், திக் விஜய் சிங்

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அல்லது மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் ஆகிய இருவரில் ஒருவர் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது இருவருமே மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x