Last Updated : 27 May, 2016 01:05 PM

 

Published : 27 May 2016 01:05 PM
Last Updated : 27 May 2016 01:05 PM

ஹைதராபாத்தில் நைஜீரிய மாணவி மீது தாக்குதல்: அறிக்கை கோரியது மத்திய அரசு

ஹைதராபாத்தில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளார் விகாஸ் ஸ்வரூப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹைதராபாத்தில் நைஜீரிய மாணவி ஒருவர் உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்க அறிக்கையை உடனடியாக அனுப்புமாறு ஆந்திர அரசிடம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கோரியுள்ளார்" எனத் தெரிவித்திருந்தார்.

கடந்த புதன்கிழமை இரவு ஹைதராபாத்தில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் நைஜீரிய மாணவி அப்பகுதிவாசிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்.

காங்கோ நாட்டு மாணவர் மசுந்தா கேடதா ஆலிவர் (29) டெல்லியில் தங்கி பயின்று வந்தார். ஆட்டோரிக் ஷாவை வாடகைக்கு எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாய்த் தகராறில், ஆலிவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் மற்றொரு ஆப்பிரிக்க நாட்டு மாணவி தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x