Published : 08 May 2022 07:16 AM
Last Updated : 08 May 2022 07:16 AM
பெங்களூரு: பெங்களூருவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘வேக்ஃபிட்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சைதன்யா ராமலிங்க கவுடா கூறியதாவது:
எங்களது நிறுவனமே வாடிக்கையாளர்களின் தூக்கத்துடன் தொடர்புடைய நிறுவனமாக இருக்கிறது. 6 ஆண்டுகளுக்கு மேலாக வாடிக்கையாளர்கள் சிறந்த முறையில் தூங்க வேண்டும் என்பதற்காக எங்களது தூக்கத்தை பறிகொடுத்து பணியாற்றி இருக்கிறோம். இப்போது எங்களது பணியாளர்கள் நிம்மதியாக தூங்க வேண்டும் என விரும்புகிறோம்.
ஏனென்றால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பணியாளர்களின் உடல் மற்றும் மன நலன் முக்கியம் என நம்புகிறோம். அதிலும் பிற்பகலில் தூங்கினால் செயல்திறனும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. நாசா, ஹார்வர்ட் பல்கலை. போன்றவை, "26 நிமிடங்கள் தூங்கினால் வழக்கத்தைவிட 33% செயல்திறன் அதிகரிக்கும்'' என ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக எங்கள் நிறுவன ஊழியர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். அவர்கள் விருப்பத்தின்படி, பணியாளர்கள் தினமும் பிற்பகல் 2 முதல் 2.30 மணி வரை அலுவலகத்தில் தூங்கலாம். இதற்காக அலுவலகத்தில் அமைதியான சூழலில் அறைகளை உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT