Last Updated : 20 May, 2016 10:45 AM

 

Published : 20 May 2016 10:45 AM
Last Updated : 20 May 2016 10:45 AM

தேசிய அரசியல்: 5 மாநில தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாஜகவுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தாலும் காங்கிரஸுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் வீசிய மோடி அலை, பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்தியது. இதன் பிறகு நடைபெற்ற ஹரியாணா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட், காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது. எனினும் கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி மற்றும் பிஹார் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி யால் அக்கட்சிக்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டதாக பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் நேற்று வெளியான 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் அசாமில் கிடைத்த வெற்றி மூலம் பாஜக முன்னேற்றப் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. இது மட்டுமின்றி கேரளாவில் முதல்முறையாக சட்டப் பேரவைக்கு செல்வதுடன் மேற்கு வங்கத்தில் கடந்த முறையை விட இம்முறை அதிக தொகுதிகளை வென்றுள்ளது. அடுத்து உ.பி. தேர்தலை சந்திக்கவிருக்கும் பாஜக வுக்கு இந்த வெற்றி உற்சாகத்தை அளிக்கும்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜகவின் தேசிய செய்தி தொடர் பாளர் சுதான்ஷு திரிவேதி கூறும் போது, “கடந்த 2014 மக்களவை தேர்தல் முதல் மோடி தலைமை யில் அரசியல் ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது. அசாமில் முதல் முறையாக நாங்கள் ஆட்சியை பிடித்துள் ளோம். மேற்கு வங்கத்தில் எங்கள் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் இதே நிலை தொடர்கிறது. எனவே, நாடு முழுவதிலும் பாஜக தலைமை யிலான ஆட்சி படிப்படியாக ஏற் படும். மாநிலங்களவையிலும் எங் களுக்கு இனி ஏறுமுகம்தான்” என்றார்.

மக்களவை தேர்தலில் படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு, அதன் பிறகு நடந்த முதல் 5 சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி கிடைக்கவில்லை. 6-வதாக பிஹாரில் மட்டும் கூட்டணியாக போட்டியிட்டு ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. உச்ச நீதிமன்றத்தால் அண்மையில் உத்தராகண்ட் மாநில காங்கிரஸ் ஆட்சி காப்பாற்றப்பட் டது. இந்த உற்சாகத்துடன் தற் போதைய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் களம் இறங்கிய காங்கிரஸுக்கு புதுச்சேரியில் மட்டும் வெற்றி கிடைத்துள்ளது. அசாம், கேரளாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை பின் னுக்கு தள்ளி விட்டு 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் கடந்த தேர்தலை விட ஒருசில தொகுதிகள் மட்டுமே இம்முறை கூடியுள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸ் வட்டாரம் கூறும்போது, “சோனியாவா? ராகுலா? எனக் கட்சியின் தலைமைக்கு தீர்க்க மான முடிவு எடுக்காமல் இருப்பது இதன் முக்கியக் காரணம். மக்கள வையிலும் கட்சி சார்பில் உறுதி யாக பேசும் தலைவர்கள் அதிகம் இல்லை. மாநிலங்களவையிலும் எங்கள் உறுப்பினர்கள் குறையும் நிலை தொடங்கிவிட்டது. அடுத்து வரவிருக்கும் பஞ்சாப் மற்றும் உ.பி. சட்டப்பேரவை தேர்தல்களில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து காங்கிரஸின் வளர்ச்சி தெரியும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x