Last Updated : 09 Apr, 2016 10:32 AM

 

Published : 09 Apr 2016 10:32 AM
Last Updated : 09 Apr 2016 10:32 AM

பனாமா லீக்ஸ் விவகாரம்: பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?- காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி கமலாபூர், தாம்தாமா பகுதிகளில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசியதாவது:

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பதுக்கப்பட் டுள்ள கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித் தார். ஆனால் இதுவரை கருப்பு பணம் மீட்கப்படவில்லை.

தற்போது பனாமா நாட்டில் பலர் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள் ளது. இதில் சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங்கின் மகன் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காத்து வருகிறார்.

பனாமா லீக்ஸ் குறித்து இது வரை ஏன் விசாரணை நடத்தப்பட வில்லை என்பதையாவது மக்களுக்கு அவர் தெரிவிக்க வேண்டும். பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி நாட்டைவிட்டு தப்பியோடி வெளிநாட்டில் வசிக்கிறார். அவரை இதுவரை இந்தியாவுக்கு கொண்டு வரமுடியவில்லை. அண்மையில் தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டைவிட்டு தப்பியோடினார்.

காங்கிரஸ் கட்சி மக்களிடையே சகோதரத்துவம், அன்பு, அமைதியை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு நேர்மாறாக பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் மக்களிடம் பிரிவினையைத் தூண்டி வன்முறையை ஏற்படுத்தி வருகிறது. சகோதரனுக்கு எதிராக சகோதரனை தூண்டி வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் ஹரியாணா முன்னேறிய மாநில மாக விளங்கியது. அங்கு பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஜாட் இன மக்களிடையே பிரிவினை ஏற்பட்டு வன்முறை வெடித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவும் அசாம் கண பரிஷத்தும் அசாமில் ஆட்சி நடத்தின. அப்போது ஏற்பட்ட வன்முறைகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இப்போது மாநிலத்தில் அமைதி திரும்பி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x