Last Updated : 28 Apr, 2016 07:32 AM

 

Published : 28 Apr 2016 07:32 AM
Last Updated : 28 Apr 2016 07:32 AM

உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி: உச்ச நீதிமன்ற முடிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது

உத்தராகண்ட் மாநிலத்தில் குடி யரசுத் தலைவர் ஆட்சி குறித்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த மாதம் 27-ம் தேதி கலைக்கப் பட்டது. அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் மீதான நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெறவிருந்த நிலை யில், மத்திய அரசு எடுத்த இந்த திடீர் முடிவால் அதிர்ச்சி அடைந்த மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ஆட்சியைக் கலைத்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

7 கேள்விகள்

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசிடம் சரமாரி யாக கேள்விகளை எழுப்பினர். சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தாமதிக்கும் செயல், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த காரணமாக இருக்க முடியுமா? சில எம்எல்ஏ-க்களை சபாநாயகர் தகுதியிழக்கச் செய்வது ஒரு மாநில அரசைக் கலைக்க சட்டரீதியான காரணமாக இருக்க முடியுமா? சட்டசபை நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து ஒரு மாநில அரசைக் கலைக்க முடியுமா? குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டால் நிதி ஒதுக்க சட்ட மசோதாவின் நிலை என்ன? என்பன உள்ளிட்ட 7 கேள்விகளை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநில சட்டசபை யில் ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசு நாளை (ஏப்ரல் 29)-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருந்தது. இந் நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி தொடரும் என்ற நிலையில் மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதால், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு திட்ட மிட்டபடி நடைபெற வாய்ப்பில்லை என தெரிகிறது. வழக்கின் அடுத்த விசாரணை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோடை விடுமுறைக்கு முன்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x