Published : 15 Feb 2022 07:28 AM
Last Updated : 15 Feb 2022 07:28 AM
புதுடெல்லி: பிரதமர் மோடி வருகையால் தனக்கு ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம்சாட்டினார்.
பஞ்சாபி்ன் ஜலந்தரில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது வருகையால் தனக்கு ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது::
நான் இமாச்சலப் பிரதேச மாநிலம் உனாவில் இருந்தேன். அங்கிருந்து நேற்று காலை 11 மணிக்கு பஞ்சாபில் ஹோஷியார்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்துக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கு தயாரானேன். ஆனால், பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வந்ததால் அந்தப் பகுதியில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதாகக் கூறி நான் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ராகுல் காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
இவ்வாறு சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT