Published : 13 Feb 2022 09:31 AM
Last Updated : 13 Feb 2022 09:31 AM
திருமலை: காஞ்சி பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக, திருமலையில் காலை பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், ‘‘விஷ்ணு சகஸ்ரநாமத்தை நாம் பக்தியுடன் தினமும் பாராயணம் செய்வதின் மூலம் இக்கலியுகத்தில் நமக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தையும் சமாளிப்பது மட்டுமல்லாது, இறுதி காலத்தில் அது மோட்சத்திற்கும் வழி வகுக்கும். அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர் விஷ்ணு சகஸ்ர நாமத்தை தர்மருக்கு எடுத்து கூறுகிறார். இதனை விஷ்ணுவே அங்கீகரிக்கிறார்’’ என்றார்.
இஸ்ரோ விஞ்ஞானிகள்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது நாளை விண்ணில் செலுத்தவுள்ள செயற்கைக்கோள் மாதிரியை வைத்து வழிபட்டனர். இதில், இஸ்ரோ இயக்குநர்கள் ஏ.கே. பத்ரா, அனுரூப், சிறப்பு அதிகாரி கே.வி.எல். குமார், முதன்மை பணியாளர் அதிகாரி பி.யசோதா, உதவி இயக்குநர் எம்.எஸ்.குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT