Published : 02 Feb 2022 08:43 AM
Last Updated : 02 Feb 2022 08:43 AM

பாஜக வாய்ப்பு தராததால் பிரதமர் மோடி போல் உள்ளவர் உத்தர பிரதேசத்தில் சுயேச்சையாக போட்டி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் சகாரன் பூரைச் சேர்ந்தவர் அபிநந்தன் பதக். (56). இவர் பார்ப்பதற்கு பிரதமர் மோடியைப் போலவே இருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் மோடிதான் என்று குழப்பம்அடைந்த நேரங்களும் உண்டு. இந்நிலையில், உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் லக்னோவில் உள்ள சரோஜினிநகர் தொகுதியில் அபிநந்தன் பதக் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து பதக் கூறியதாவது: உ.பி. தேர்தலில் பாஜகசார்பில் போட்டியிட ‘சீட்’ கேட்டேன். பாஜக தேசிய தலைவர் நட்டா, அமைச்சர் அமித் ஷாஆகியோருக்கு கூட கடிதம் எழுதினேன். ஆனால், அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அதனால் சுயேச்சையாகப் போட்டியிட முடிவெடுத்தேன். நான் மோடியின் பக்தன். பாஜக என்னை புறக்கணிக்கலாம். ஆனால், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன். அதன் பிறகு முதல்வர்யோகி ஆதித்யநாத் 2-ம் முறையாக பதவியேற்க உதவி செய்வேன். மோடியும் யோகியும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவர்கள். அவர்களுடைய பொறுமை, சுயநலமின்றி இந்த நாட்டு மக்களுக்காக உழைத்து வருவது எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதற்கு முன்னர் சத்தீஸ்கர் தேர்தலில் போட்டியிட பாஜக.விடம் சீட் கேட்டேன். அதற்காக அந்த மாநிலத்துக்கும் சென் றேன். ஆனால் முதல்வர்ராமன் சிங், நான் ஒரு நாள் தங்குவதற்குக் கூட உதவி செய்யவில்லை. என் சாபம்தான் அவரை பதவியில் இருந்து தூக்கியது.

கடந்த 1999-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டேன். அதில் என்னுடைய பணம்எல்லாம் போய்விட்டது. அதில் இருந்து மீள முடியவில்லை. அதனால் என் மனைவி மீராவுக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பின்னர், ரயிலில் வெள்ளரிக்காய் விற்று வருகிறேன். எனக்கு 3 பெண்கள் உட்பட 6 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் 2 பேரை தவிர மற்றவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2 மகன்களுடன் என் மனைவி வாழ்கிறார். நான் நாட்டு மக்களுக்காக உழைக்க வந்துவிட்டேன்.

பிரதமர் மோடியை கடந்த 2014-ம் ஆண்டு வாரணாசி தேர்தலின் போது சந்தித்திருக்கிறேன். அப்போதில் இருந்து என்வாழ்க்கையை மோடிக்காக அர்ப்பணித்துவிட்டேன். பிரதமர்மோடியை அவமானப்படுத்திய தற்காக, பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த அவரது ஆட்களிடம் கடுமையாக சண்டை போட்டுவிட்டுவந்தேன்.

இவ்வாறு அபிநந்தன் பதக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x