Last Updated : 01 Feb, 2022 09:21 AM

 

Published : 01 Feb 2022 09:21 AM
Last Updated : 01 Feb 2022 09:21 AM

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது: சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் சரிவு

புதுடெல்லி: நாட்டில் அன்றாட கரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 20 லட்சத்துக்கும் கீழ் சரிந்துள்ளது. தினசரி பாசிடிவிட்டி விகிதம் 11.69% என்றளவில் உள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பாசிடிவிட்டி ரேட் என்பது 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதன் கணக்கீடு.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,67,059.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,14,61,499.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,54,076.

இதுவரை குணமடைந்தோர்: 3,92,30,198.

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 17,43,059 (4.20%)

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 11.69% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1192.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,96,242.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை: 1,66,68,48,204 (166 கோடி).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x