Published : 26 Jan 2022 07:36 AM
Last Updated : 26 Jan 2022 07:36 AM
நாக்பூர்: மகாராஷ்டிராவில் நிகழ்ந்த கார் விபத்தில் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் கூறும்போது, “மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டம், செல்சுரா கிராமத்துக்கு அருகே உள்ள பாலத்தில் நேற்று அதிகாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது.
இதில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் களில் திரோரா தொகுதி பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்தலேவின் மகனும் எம்பிபிஎஸ் மாணவர்கள் சிலரும் அடங்குவர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மகாராஷ்டிர சாலைவிபத்தில் 7 பேர் உயிரிழந்த தகவல்அறிந்து மனவேதனை அடைந்தேன். இந்தத் தருணத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT