Published : 21 Dec 2021 02:03 PM
Last Updated : 21 Dec 2021 02:03 PM

எப்போது கரோனா தொற்று முடிவுக்கு வரும்? குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா?- அறிவியல் வல்லுநர் பதில்

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் ககன்தீப் காங்.

பெங்களூரு: கரோனா தொற்று எப்போது முடிவுக்கு வரும், இயல்பு வாழ்க்கையை எப்போது வாழ்வோம், குழந்தைகள் கட்டுப்பாடின்றி எப்போது பள்ளிகள் செல்லுமா? இப்படி பல்வேறு வகையான சந்தேகங்களுக்கும் பேராசிரியர் ககன்தீப் காங் பதில் அளித்துள்ளார்

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மைக்ரோபயாலஜி துறையின் பேராசிரியராக இருப்பவர் ககன்தீப் காங் பெங்களூருவில் சர்வதேச மையத்தில் நடந்த பெங்களூரு இலக்கியத் திருவிழாவில் “எதைப் பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம்” என்ற தலைப்பில் ககன்தீப் காங் பங்கேற்றார். அப்போது கரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று முடிவதற்கான சாத்தியங்கள் ஏதேனும் இருக்கிறதா, முடிவு இருக்கிறதா?

இந்தியாவிலிருந்து போலியோவை நீக்க நாம் கடினமாக முயன்றோம். ஆனால், நீண்டகால முயற்சிக்குப் பின் முடிவு எனும் புள்ளியை அடைந்ததால், இப்போது நாட்டில் போலியா வைரஸ் இல்லை. போலியோவை ஒழிக்க நம்மால் முடிந்தபோது, கோவிட் பெருந்தொற்றை ஒழிக்க முடியாதா. போலியோ மனிதர்களை மட்டும் பாதித்தது. ஆனால், சார்ஸ் கோவிட் மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கிறது. அறிகுறியில்லாத வைரஸ் பரவல் உங்களுக்கு இருந்தால் அதனால் தடைகளைக் கடக்க முடியும் அதை எளிதாக நீக்கவும் முடியாது.

சார்ஸ் கோவிட் வைரஸ் ஆர்என்ஏ வைரஸ். இதில் சில உருமாற்றங்கள் நடந்தாலும் அதில் பிரச்சினையில்லை. சில உருமாற்றங்கள் வைரஸை வீரியமாக்கும். சில வீரியத்தைத் தராது. தொடக்கத்தலிருந்து அனைத்து உருமாற்றங்களையும் பிரித்து விவரித்தால், ஒவ்வொரு உருமாற்றத்துக்கும் புதிய வகை குணாதிசயம் இருக்கும்.

ஆனால், சார்ஸ்-கோவிட் மிகவும் மெதுவாகப் பரவும் வைரஸ். ஆனால், வேகமாக நகலெடுக்கும் தன்மை இருப்பதால், பிரதி எடுப்பதால் வேகமாகப் பரவுகிறது. ஒவ்வொரு முறை வைரஸ் தன்னை பிரதியெடுக்கும்போது, அது அடுத்த நபருக்கு பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். அதிகமான உருமாற்றங்களுக்கும் சாத்தியம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

வைரஸ் பரவலுக்கு இடையே எவ்வாறு வாழ்வது?

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய வகை கரோனா வைரஸைச் சந்திக்கிறார்கள். வைரஸ்களுடன் பழகி, அதை எதிர்த்து நமக்கு அனுபவம் இருக்கிறது. இயல்பாகவே அது நடந்துவிடும். கரோனா வைரஸின் 3 வகைகளையும் பார்த்தால், ஒமைக்ரான் பலவீனமானது.

வைரஸ் பலவீனமானது என்பதால் பாதுகாப்பு நடவடிக்களை தளர்த்தாமல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மழை பெய்தால் குடை எடுக்கிறோம், குளிர் இருந்தால் ஸ்வெட்டர் அணிகிறோம். அதுபோன்று, அதிகமானோர் பாதிக்கப்படும் சூழலில் வெளியே செல்வதைக் குறைக்க வேண்டும், மற்றவர்களை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிதல், காற்றோட்டமான பகுதி, சமூக விலகல், நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்த்தல் போன்றவற்றைச் செய்யலாம்” எனத் தெரிவித்தார்.

ஒமைக்ரான் வைரஸ் பற்றிக் கூறுங்கள்?

கடந்த ஆண்டைப் போல் இப்போது நாம் இல்லை, அப்போது நம்மிடம் தடுப்பூசி கிடையாது. தொற்றின் மூலம் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி பெற்றோம். ஆனால், தற்போது நம்மிடம் தடுப்பூசி இருக்கிறது. ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவக்கூடியது.

ஆதலால், இரு முகக்கவசம் அணிதல், கூட்டத்தைத் தவிர்த்தல், காற்றோட்டமான இடத்தில் இருத்தல், ஒவ்வொருவரும் இரு தடுப்பூசிகளைச் செலுத்துதல் போன்றவற்றைச் செய்யலாம். பூஸ்டர் டோஸ் பற்றி அரசு முடிவு செய்யும்.

தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்குச் சென்றதாகவோ அல்லது மருத்துவமனையில் தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவோ புள்ளிவிவரங்கள் இதுவரை இல்லை. கடந்த ஆண்டு இருந்ததைப் போன்று தீவிரமான விளைவுகளை உண்டாக்காது.

11 மாதங்களில் 130 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசியின் செயல்திறன் குறித்த புள்ளிவிவரங்கள், 5 லட்சத்துக்கும் குறைவாகத்தான் இருக்கிறது.
தடுப்பூசி செலுத்தியவர்களிடையே உயிரிழப்பு, தடுப்பூசி செலுத்தாதவர்கள், ஒரு தடுப்பூசி, இரு தடுப்பூசி செலுத்தியவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் தேவை. ஆனால், இந்தப் புள்ளிவிவரங்கள் எந்தத் தடுப்பூசியை எடுத்தார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை. தடுப்பூசி செலுத்தியவர்கள் இணை நோய்களுடன் இருந்தார்களா என்பதும் தெரியாது. அனைத்தும் நமக்கு சதவீதத்தின் அடிப்படையில்தான் இருக்கிறது. நாம் வைரஸுடன்தான் வாழ்ந்து வருகிறோம். வைரஸை எளிதாக அழிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கள் பள்ளிக்குச் செல்வது பாதுகாப்பானதா, தடுப்பூசி செலுத்தியபின் அனுப்பலாமா?

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, சிறந்த தடுப்பூசியை கவனத்துடன் செலுத்துவது சிறந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும், ஆபத்து நன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் இது வேறுபடும். உலகின் பிற பகுதிகளில் உள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இளம் வயதினருக்குக் கடுமையான நோய்த் தொற்றுக்கான ஆபத்து மிகக் குறைவு.

எந்தத் தடுப்பூசி சிறந்தது என்று தெரியும்போது குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடலாம். தடுப்பூசிகள் குறித்து ஏராளமான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தபின்புதான் கவனத்துடன் தடுப்பூசி செலுத்துவதில் இறங்க முடியும். அதுவரை, குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லலாம், சமூக விலகலைக் கடைப்பிடிக்கலாம். கைகளை அடிக்கடி கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதலைக் கடைப்பிடிக்கலாம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது முக்கியமானது. குழந்தைகளுக்கான இடர்கள் மிகக் குறைவுதான்.

இவ்வாறு ககன்தீப் காங் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x