Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

வருமான வரி இணையதளத்திலேயே வரி செலுத்துவோர் ஆண்டு வருமான அறிக்கை விவரம் பெறலாம்

வருமான வரி செலுத்துவோருக்கு இணைய தளத்திலேயே பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதன்படி, வரி செலுத்தும் இணையதளத்தில் ஆண்டுவரி செலுத்தும் விவரத்தை (ஏஐஎஸ்) இனி வரி செலுத்துவோர் பெற முடியும். அத்துடன் கூடுதலாக வட்டி மூலமாக பெறப்பட்ட தொகை, டிவிடெண்ட், பங்குபத்திர முதலீடு, பரஸ்பர நிதி பரிவர்த்தனை, வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட தொகைஉள்ளிட்ட விவரங்களையும் இணையதளம் மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை தங்களது வருமான வரி ரிட்டர்னில் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை கூறியிருந்தது. வரி செலுத்துவோர் தங்களது 26 ஏஎஸ் படிவத்தில், பரஸ்பர நிதி முதலீடு, வெளிநாட்டிலிருந்து தங்கள் வங்கிக் கணக்குக்கு வந்த தொகை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

படிவம் 26 ஏஎஸ் என்பது ஆண்டு முழுவதிலும் வரி செலுத்துவோர் மேற்கொண்ட முதலீடு விவரங்களை உள்ளடக்கியது. இந்த விவரங்களை வருமான வரித்துறைஇணையதளத்திலிருந்து வரி செலுத்துவோர் தங்களுக்குத் தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

ஏஐஎஸ் விவரமானது எளிதில் பெறக்கூடியது. இந்த விவரங்களை இணையதளத்திலிருந்து பெற முடியும். இது பிடிஎப், சிஎஸ்பி, ஐஎஸ்என் உள்ளிட்ட படிவங்களில் பெறலாம். இதற்கு ஏஐஎஸ் பகுதிக்குச் சென்று சர்வீஸ் மெனுவை அழுத்தினால் பெறலாம் என்று வருமான வரித்துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவோர் அதுபற்றிய விவரங்களை தெரிவிப்பதோடு வரி படிவத்தில் ஏதேனும் வேறுபாடு இருந் தால் அதையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க முடியும்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x