Last Updated : 09 Dec, 2015 09:39 AM

 

Published : 09 Dec 2015 09:39 AM
Last Updated : 09 Dec 2015 09:39 AM

தமிழகத்துக்கு 100 டன் பால் பவுடர், 50 ஆயிரம் போர்வைகள் வழங்க‌ப்படும்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு ரூ. 5 கோடி நிதியுதவியை தொடர்ந்து 100 டன் பால் பவுடர், 50 ஆயிரம் போர்வைகள் கர்நாடக அரசு சார்பாக அனுப்பி வைக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கடந்த 2-ம் தேதி கர்நாடக‌ முதல்வர் சித்தராமையா தமிழகத்தில் வெள்ளத்தில் சிக்கி யுள்ள சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு கர்நாடக அரசு சார்பாக ரூ. 5 கோடி வழங்கப்படும் என அறிவித்தார். இதனை தமிழக அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடக அரசு அதிகாரிகள் தமிழக அரசுடன் பேசிய போது தற்போது பால், பால் பவுடர் மற்றும் போர்வை தட்டுப்பாடு உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே கர்நாடக பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ரூ. 1.5 கோடி மதிப்பில் 100 டன் பால் பவுடர் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. இதே போல 50 ஆயிரம் போர்வைகள் மற்றும் பால் பாக்கெட்டுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் உடனடியாக அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெங்களூரு மாநகராட்சி சார்பாக 198 கவுன்சிலர்களும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வெள்ள நிவாரணமாக வழங்க முடிவெடுத்துள்ளனர்.

இதே போல பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழகத்துக்கு வழங்கப்போவதாக அறிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x