Last Updated : 04 Nov, 2015 08:57 AM

 

Published : 04 Nov 2015 08:57 AM
Last Updated : 04 Nov 2015 08:57 AM

பிஹாரில் ஓய்ந்தது பிரச்சாரம்

ஐந்து கட்டங்களாக நடைபெற்று வரும் பிஹார் சட்டப்பேரவைக் கான தேர்தல் பிரச்சாரம் நேற் றுடன் நிறைவடைந்தது.

பிஹார் சட்டப் பேரவைத் தேர்த லில், 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 5-வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கவுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து உருவான மகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி 30 பிரச்சாரக் கூட்டங் களில் பங்கேற்றுள்ளார். பிரதமர் ஒருவர் சட்டப்பேரவைத் தேர்த லுக்காக இவ்வளவு பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றிருப்பது இதுவே முதல் முறை.

இட ஒதுக்கீடு, சகிப்புத் தன்மை ஆகியவை பிரச்சாரங்களில் முன் னிறுத்தப்பட்டன. காங்கிரஸின் சகிப்புத்தன்மை குறித்த குற்றச் சாட்டுக்கு, 1984 சீக்கிய கல வரத்தை பதிலடியாக குறிப்பிட்டார் மோடி. பதிலுக்கு குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தியது காங்கிரஸ்.

இட ஒதுக்கீடு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறியதைக் குறிப் பிட்டு, மகா கூட்டணி பிரச்சாரம் செய்தது. பதிலுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதில் 5 சதவீதத்தைப் பறித்து மத சிறுபான்மையினருக்கு நிதிஷ் கொடுக்கப்போகிறார் என மோடி குற்றம் சாட்டினார்.

தேர்தல் நடத்தை விதிமுறை களை மீறி பேசியதாக பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

நேற்றுடன் பிரச்சாரங்கள் முடிவடைந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x